தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் கொரோனா... ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 23, 2021, 8:51 PM IST
Highlights

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கல் குறைந்து வந்த நிலையில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தொற்றிற்கு ஆளானவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தல் ஆகிய பணிகளை தொற்றி அதிகமுள்ள மாநிலங்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் இணைநோய்கள் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 902 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,48,041 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 8,619 இல் இருந்து 9,145 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.
 

click me!