
சொத்து வாங்கினால் மாட்டுவீங்களா...? மாட்டமாட்டீங்களா....? “தில்லாலங்கடி ரியல் எஸ்டேட் அதிபர்கள் “....!!!
தெளிவா புரிஞ்சிக்குங்க.......இப்ப நாடு இருக்குற நிலைமைக்கு சொத்து வாங்குவது என்பது யோசிக்க வேண்டிய விஷியம்........
கருப்பு பணத்திற்கு சொந்தக்காரர்களான ரியல் எஸ்டேட் அதிபர்கள், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி, தற்போது தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை எப்படி மாற்றுவது என முழித்து கொண்டிருக்கிறார்கள்......இந்நிலையில், பொதுமக்களிடம், ஏறக்குறைய பணத்தில் இடம் விற்பதற்காக, பிரேயின் வாஷ் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனை நம்பி, நீங்க கையில் இருக்கும் பணத்திலும் , இல்லை வேறு யாரவது உங்களிடம் கொடுத்த பணத்தை வைத்தோ, ஒரு இடம் வாங்கிவிடலாம் என வாங்கினீர்கள் என்றால், மறக்காதீங்க.......உங்களை தேடி வருவார்கள் வருமான வரித்துறையினர் .
ஏன் என்றால் , பத்திர பதிவில் உங்களின் பான் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரமும் கொடுக்கப்படும். இதன் மூலம் வருமானவரித்துறையினர் , உங்களை கேள்வி மேல் கேள்வி கேட்பார்.
உங்களுக்கு பணம் எப்படி கிடைத்தது...?அதற்குண்டான சரியான ஆவணம் உண்டா என பல கேள்விகள் நீளும்........இது தேவையா ? யோசித்து பாருங்கள்.......
ரியல் எஸ்டேட் அதிபர்களோ .....வருமானவரித்துறையினரிடம் , இடம் விற்றதற்கான ஆவணத்தை காண்பித்து, அவர்கள் தப்பித்து விடுவார்கள்.........
இடம் வாங்கும் நாமோ.......மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதுதான்........!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.