அதிரடி சரவெடி : வெறும் 1000  ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ “ப்யூச்சர் போன் “.....!!!

 
Published : Nov 17, 2016, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
அதிரடி சரவெடி : வெறும் 1000  ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ “ப்யூச்சர் போன் “.....!!!

சுருக்கம்

அதிரடி சரவெடி : வெறும் 1000  ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ “ப்யூச்சர் போன் “.....!!!

ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து சலுகைகளும்  நாம் அறிந்ததே..

ஜியோவை  பொறுத்தவரை,   அடுத்தடுத்து  பல  அறிவிப்புகளை  வழங்கியது. இவை அனைத்தும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் விதமாகவே  இருந்தது. குறிப்பாக 4 ஜி சேவை ,  அனைவராலும்  ஈர்க்கப்பட்ட  ஒரு விஷியம்.

இந்நிலையில் மீண்டும்  ஒரு அதிரடி  சரவெடியாக ,  ரிலையன்ஸ் ஜியோ ஒரு அற்புத  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 அதன்படி,  மிக  குறைந்த  விலையில், 4 ஜி  சேவையை  பயன்படுத்தும்  விதமாக , வெறும்  ஆயிரம்  ரூபாய்க்கு  மொபைல்   போனை  அறிமுகம்  செய்ய உள்ளது.

இதனை, ரிலையன்ஸ் ஜியோவும், பிரபல  லாவா  நிறுவனமும்  இணைந்து, தயாரிக்க களத்தில்  இறங்கியுள்ளது.

தொடக்கத்தில்,  பல  சிறப்பம்சங்களை  கொண்ட இந்த  மொபைல்   போன் ,  லாவா மற்றும்  ரிலையன்ஸ்  ஜியோ  பெயரிலேயே  வரும் .

ரிலையன்ஸ்  ஜியோ  அறிமுகமான,  செப்டெம்பர் 5, 2016  முதல்  இன்று வரை தற்போது , 25   மில்லியன்  கஸ்டமர்ஸ்  கைவசம்  வைத்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும்  மிக  விரைவில், 100  மில்லியன் கஸ்டமர்சை   ஈர்க்க  வேண்டும் என்பதே  நிறுவனத்தின்  அடுத்த  இலக்காக  உள்ளது.

தற்போது இந்தய மார்க்கெட் எடுத்துக்கொண்டால் , 4G சேவை பயன்படுத்தும் ஸ்மார்ட்   போன்  குறைந்தபட்சமாக 3,000  ரூபாய்க்கு  கிடைக்கிறது.

ஆனால், உலகிலேயே  மிக  குறைந்த  விலையில் 4G சேவை பயன்படுத்தும் ஸ்மார்ட்   போன்,   வெறும் 1000  ரூபாய்க்கு  என்றால்  அது ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்  செய்யும் “ப்யூச்சர் போன் “...தான்  என்பதில்,  எந்த  மாற்றமும்  இல்லை .....!!!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!