
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு நடத்திய ஆய்வில், கரு தரிக்கும் பெண்கள் பலரும் குடும்ப, சமூக மற்றும் சுகாதார காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
இது போன்ற , மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களை கண்டறிந்து, அவர்களின் மன அழுத்தத்தை நீக்க வேண்டும் .
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது கருவில் உள்ள குழந்தைகளின் மன நலனை பாதிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நாள்பட்ட மன அழுத்தம், காரணமாக, கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கச் செய்வதாக, அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட மன அழுத்தம், குழந்தை பிறந்தபின், அந்த குழந்தைக்கு மனநலன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கர்ப்பமாக உள்ள பெண்ணை , உடனிருந்து, அன்பாகவும் , அரவணைப்போடும் பார்த்துகொண்டால், தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்பது...... உண்மை
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.