முதல் அலையில் 8 கர்ப்பிணி பெண்களும், 2வது அலையில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 30 கர்ப்பிணிகள் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரலில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் பதிவாகி வந்த நிலையில், ஒரு நாள் பாதிப்பு 4 லட்சம் கடந்து உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்தது.
undefined
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், முதல் தொற்றை ஒப்பிடுகையில் 2வது அலையில், அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2வது அலையில் இந்தியாவில் இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 111 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. சதவீத அடிப்படையில் 28.7% பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், முதல் அலையின் போது 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே அதாவது 14.2 சதவீத பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் அலையில் 8 கர்ப்பிணி பெண்களும், 2வது அலையில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 30 கர்ப்பிணிகள் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது.