தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். தற்போதைய நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரை தொற்றி உள்ளது.
உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா முதல் அலைக்குப்பின் கடந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே வேளையில், கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை பெற்று வருகிறது. இந்தியாவில் இரட்டை உருமாற்ற வகை வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இதில், ‘டெல்டா’ வகை வைரஸ் என பெயரிடப்பட்ட வைரஸ்தான் இந்தியாவில் 2வது அலை பெரும் பாதிப்பு மற்றும் உயிர் பலியை ஏற்படுத்தியது.
undefined
இந்நிலையில், தற்போது, இந்தியாவில் 2வது அலை பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் சில மாதங்களில் 3வது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு அடித்தளமிடும் வகையில், ‘டெல்டா பிளஸ்’ எனும் புதிய உருமாற்ற வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஏஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கொரோனா வைரசை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இப்போதுள்ள உருமாற்ற வைரஸ்களில் வித்தியாசமானதாக உள்ளது. இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிக்க உதவக் கூடியது.
எனவே, தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். தற்போதைய நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரை தொற்றி உள்ளது. இங்கிலாந்தில் 36 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குப் பிறகு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குப் பிறகு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மருத்துவ நிபுணர்கள் மத்தியில் புதிய பீதியை ஏற்படுத்தி உள்ளது.