இட்லி, தோசைக்கு புதுவிதமான ஸ்டைலில் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி (அ) தோசை செய்ய போறீங்களா...? இட்லி தோசைக்கு எப்போது உங்க வீட்டில தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சாம்பார் தான் வைத்து சாப்பிடுகிறீர்களா..? இன்று புதுவிதமான சட்னி ஏதாவது செய்து சாப்பிட்ட விரும்பினால், உங்களுக்கான ஒரு புது ரெசிபி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அது வேற ஏதும் இல்லைங்க பூண்டு சட்னி தான்.
எப்போதும் செய்யும் விதம் தானே என்று நினைக்காதீங்க... புதுவிதமான ஸ்டைலில் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று கொண்டு வந்துள்ளோம். அதன் சுவையும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த பூண்டு சட்டினியை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் 3 இட்லி வாங்கி சாப்பிடும் உங்கள் குழந்தை இன்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது புதுவிதமான ஸ்டைலில் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?!காலை டிபனுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. சுவை டக்கரா இருக்கும்!
பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
வரமிளகாய் - 10
புளி - 1 (எலுமிச்சை அளவு)
பூண்டு - 1/4 கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளே! ஆரோக்கியமான காலை டிபனுக்கு இப்படி இட்லி செய்து சாப்பிடுங்க!
செய்முறை:
பூண்டு சட்னி செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், புளியை போட்டு அதன்பச்சை வாசனை போக எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த வரமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில் எடுத்து வைத்த உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து, அவற்றின் பச்சை வாசனை போகும் வரையும், நிறம் மாறும் வரையும் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி விடுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற வையுங்கள். அவை நன்கு ஆறியது ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு கடாயை எடுத்து அதை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடானதும் கொஞ்சம் கடுகு, சிறிதளவு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்ந்து சேர்க்கவும் மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கிளறி விடுங்கள் தண்ணீர் வற்றியதும் அடுப்பை அனைத்துவிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான பூண்டு சட்னி ரெடி!! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D