நாம் பொங்கல் வைக்கும்போது பொங்கல் பானைக்கு அருகில் கருப்பு எப்போதுமே இருக்கும். ஆனால் அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
பொங்கல் விழாவானது, விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்திய பண்டிகை ஆகும். இது தமிழர்களால் பாரம்பரியமாக கோலாகலமாக கொண்டப்படுகிறது. இந்த பண்டிகையானது நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது, தைக்கு முன் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது மார்கழி கடைசி நாள் ஆகும். தை முதல் நாள் தமிழர்களின் அறுவடை திருநாளான தைப் பொங்கல் கொண்டாடப்படும், பிறகு மூன்று மற்றும் நான்காவது நாள் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொதுவாகவே, பொங்கல் என்றாலே நமக்கு நினைவுக்கு முதலில் வருவது சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு ஆகும். இவை இல்லையென்றால் பொங்கல் நிறைவடையாது. நீங்கள் பார்த்திருப்பீர்கள், எப்போதும் பொங்கல் வைக்கும்போது பொங்கல் பானைக்கு அருகில் கருப்பு இருக்கும். ஆனால் அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
இதையும் படிங்க: Pongal Special | பொங்கல் பண்டிகையில் கரும்பு கூறும் வாழ்க்கை தத்துவம் ..!
பொங்கலில் கரும்பின் முக்கியத்துவம்:
கரும்பு சாப்பிடுவதற்கு தித்திப்பாக இருக்கும். மேலும் இது மகிழ்ச்சியைக் குறிக்கிறதாம். பொங்கலின் போது கரும்பு பயன்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக ஒரு கதை இருக்கிறது. அதுவும் அந்த கதை
சிவனுடன் தொடர்புடையது.
இதையும் படிங்க: Pongal 2024: இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது..? முழுதகவல்கள் இதோ!
கரும்புக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு:
ஒரு பெரும் பொங்கல் நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும், யானையின் கல் உருவத்திற்கு கரும்பு ஊட்டும் அற்புதத்தை சிவபெருமான் நிகழ்த்தியதாக கதை ஒன்று உள்ளது. மேலும், சிவபெருமான், மீனாட்சி கோயிலில் 'சுந்தரேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அதுபோல், கோயிலில் நிகழ்வின் அடிப்படையில் ஒரு கல் கூட அஙந்கு செதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதுபோல பொங்கல் அன்று, கரும்பு தவிர, மஞ்சள் கட்டிகள், கூரைப்பூ, ஆவாரம் பூ, வாழை இலைகள் மற்றும் மா இலைகள் வைத்து இறைவனை வழிபடுகிறார்கள். பொங்க பானையின் கழுத்தில் புதிய மஞ்சள் இலைகளால் கட்டப்பட்டிருக்கும். அது செழிப்பைக் குறிக்கின்றன.