ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் நினைவுக்கு வரும். தமிழகம் முழுவதுமே பொங்கல் பண்டிகை தொடங்கி பல மாதங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏறு தழுவுதல், ஏறு கோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருந்து பிடித்தல் என தமிழகத்தின் பல பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு பண்டைய காலத்தில் முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையாக பண்டைய காலத்தில் இருந்தது. முல்லை நிலத்தில் வளர்க்கப்படும் காளைகளை வேட்டைக்கு அழைத்து செல்வதும், அவற்றுடன் மோதி விளையாடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. முல்லைக்கலி, கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை, பாடல்களில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் இந்த விளையாட்டு எவ்வளவு தொன்மையானது என்று அறிந்து கொள்ள முடியும்..
மாட்டுப் பொங்கல் 2024 : மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன பெண்கள் காளையை அடக்குபவமனை மணமகனாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்காக காளையை அடக்கும் போட்டி நடத்தப்படும். அப்பொது சல்லிக்காசு என்னும் நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பண முடிப்பு சொந்தம். இந்த பழக்கம் தான் பின்னர் சல்லிக்கட்டு என்று மாறியது. பின்னர் அது பேச்சு வழக்கில் ஜல்லிக்கட்டு என்று மாறியது.
பழந்தமிழ் இலக்கியங்கள், சிந்துசமவெளி நாகரிகத்திலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இருந்ததற்கான சான்றுகள் உள்ள. கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவுதல் வழக்கத்தில் இருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் உள்ள தேசிய கண்காட்சியில் சிந்து சமவெளி சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி எறிவதும் போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இந்திய நாட்டின் பசுக்களின் பாலில் தான் அதிக நோயெதிர்ப்பு சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் புலிக்குளம் பசு இனங்களின் பாலே என்று நிரூபணம் செய்யபப்ட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிக்குளம் என்னும் ஊரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கென தனிச்சிறப்புமிக்க புலிக்குளம் காளையினம் வளர்க்கப்படுகிறது.
பொங்கல் 2024 : தேதி, வரலாறு, முக்கியத்துவம், கொண்டாட்டங்கள் மற்றும் பல...
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் மறுநாளான மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை தான் என்று கூறும் அளவுக்கு அங்கு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகமாக நடைபெறுகின்றன. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. சிவகங்கை மாவட்டம் சிராவய்ல், அரளிப்பாறை, சிங்கம்புணரி, புதூர் போன்ற இடங்களிலும் புதுகோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு கிராமங்களில் சிறு தெய்வங்களின் வழிபாட்டு நம்பிக்கை உடனும் தொடர்புடையது. அம்மை போன்ற கொடிய நோய் பரவிய காலத்திலும், வறட்சி காலத்திலும் தங்கள் குறையை போக்கினால் ஜல்லிக்காடு நடத்துகிறோம் என்று வேண்டுதல் செய்தும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது பல நூறு ஆண்டுகளாக தமிழர் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டை இன்னும் பல நூறு ஆண்டுகள் பேணி காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.