தயாராக இருங்கள்..! இன்று இரவு 8 மணிக்கு... பிரதமர் மோடி முக்கிய உரை..!

By ezhil mozhiFirst Published Mar 24, 2020, 12:08 PM IST
Highlights

மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒன்றாக கூடி கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்த உள்ளார் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று இரவு விளக்கமாகப் பேச உள்ளார்.

சென்ற வாரம் நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி. சென்ற ஞாயிற்றுக்கிழமை 22ஆம் தேதி அன்று அனைவரும் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதன்படி நாட்டு மக்களும் அவருடைய பேச்சைக் கேட்டு ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம். மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒன்றாக கூடி கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். கொரோனா குறித்தும் அது குறித்த தாக்கம் குறித்தும், மக்கள் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை இன்று பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலி சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது எந்த அளவுக்கு கொரோனா தாண்டவம் ஆடி வருகிறது என நமக்கு அனைவருக்கும் தெரியும். இந்த ஒரு நிலையில் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மக்களாகிய நாம் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இது குறித்து இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் சில முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!