ஊருக்கு கிளம்பி போனவர்களுக்கு மிக முக்கிய செய்தி..! இளம் பெண் டாக்டரின் கட்டளை..!

By ezhil mozhiFirst Published Mar 24, 2020, 11:03 AM IST
Highlights

சென்னையிலிருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஊர் திரும்பியவர்கள் தயவு செய்து 14 நாட்களுக்கு குடும்பத்தினர் நண்பர்களிடம் இருந்து உங்களை நீங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். 

ஊருக்கு கிளம்பி போனவர்களுக்கு மிக முக்கிய செய்தி..! இளம் பெண் டாக்டரின் கட்டளை..! 

அவசரமாக அவசரமாக ஊருக்கு கிளம்பி சென்ற மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயத்தை மருத்துவர் கீர்த்தனா திருமலைசாமி தெரிவித்து உள்ளார். 

அதன் படி, 

ஹோம் குவாரன்டைன்(Home quarantine) -வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்றால் என்னவென்று முதலில் புரிந்து செயல்படுங்கள். 

சென்னையிலிருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஊர் திரும்பியவர்கள் தயவு செய்து 14 நாட்களுக்கு குடும்பத்தினர் நண்பர்களிடம் இருந்து உங்களை நீங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடமைகளைக் கொண்டு போய் நடு வீட்டில் போட்டுவிட்டு பயணக்களைப்பில் சேரிலும் படுக்கையிலும் சாயாதீர்கள்.

வீட்டிற்குள் நுழையும் முன்பு உடமைகளை வெளியே வையுங்கள். அதை உங்கள் குடும்பத்தாரைத் தொட வைக்காதீர்கள். நீங்களே ஹேண்டில் செய்யுங்கள்.

கைகளை சோப் அல்லது சானிட்டைசர்  போட்டுக் கழுவி விட்டு, அதன் பின் உடனே குளித்து, போட்டு வந்த துணியை துவைத்து நீங்களே தனியே காய வைத்துச் செல்லுங்கள். அதை உங்கள் குடும்பத்தினரை செய்ய வைத்து, உங்கள் குடும்பத்தினர் துணிகளுடன் கலந்து நோய்த் தொற்றைப் பரப்பாதீர்கள்.

வீட்டில் எல்லா இடந்திலும் புழங்காமல் தயவு செய்து ஒரு தனி அறைக்குள் மட்டுமே இருங்கள். தண்ணி குடிக்கக் கூட வீட்டின் பிற அறைகளுக்கோ, நடுக்கூடத்திற்கோ செல்ல வேண்டாம்.

பாத்ரூம் மற்றும் பிற  கதவுகளைக் கூட முழங்கைகளால் திறந்து உபயோகியுங்கள்.சுவிட்சுகள், டிவி ரிமோட் எதையும் தொடாதீர்கள். 

முக்கியமாக உங்கள் செல்போன் நிறைய கிருமிகளைக் கொண்டிருக்கும். தயவு செய்து வீட்டினரிடம் குழந்தைகளிடம் கையில் கொடுக்காதீர்கள். 

சொந்தங்கள் வீடு, தாத்தா வீடு, பக்கத்து வீடு எங்கேயும் செல்லாதீர்கள். 

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகழுவுங்கள். வீட்டில் எதையும் தொடாதீர்கள் முடிந்த வரை.உங்களுடைய கண், மூக்கு, வாயைத் தொடாதீர்கள். 

குழந்தைகள் பெரியவர்களை யாரையும் தொடாதீர்கள். 

பால் பேக்கட், பிஸ்கட் பேக்கட் என வெளியிலிருந்து எதை வாங்கி வந்தால் கூட அதைக் கழுவுங்கள். அதைத் தொட்டதும் உங்கள் கைகளையும் கழுவுங்கள். வீட்டிற்கு வெளியிருந்து எந்தப் பொருட்களையும் உள்ளே சேர்க்க வேண்டாம். For example - பால் பேக்கட், பக்கத்து வீட்டு சாம்பார் பாத்திரம் முதற் கொண்டு எல்லாமே பிறர் கை பட்ட பொருள்கள் தான். அத்யாவசியமின்றி பிறர் கைபட்ட எதையும் தொடாதீர்கள். பிறர் என்பது உங்களைத் தவிர எல்லாரையும் குறிக்கும். உங்கள் அம்மா, மனைவி, குழந்தைகள் கூட பிறர் தான். 

உங்களுக்கு சளியோ, இருமலோ, காய்ச்சலோ இல்லாமல் இருக்கலாம். அகற்காக நோய்த் தொற்று இல்லை என்று அர்த்தம் அல்ல. நோய் கிருமி உடலுக்குள் நுழைந்த பின் 2 முதல் 15 நாட்கள் ஆகும் அறிகுறிகள் வர.இதைத் தான் இன்குபேசன் பீரியட் என்போம். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அடங்குவேன் என்று திரிந்தால் இன்குபேசன் பீரியடில் போகும் இடமெல்லாம் இடைப்பட்ட காலத்திலும் கிருமியைப்பரப்பிக் கொண்டிருப்பீர்கள். 

ஒருவரின் மூலம் சில ஆயிரம் பேருக்கு பரவ வழி செய்வீர்கள். 

சாதாரண சளிதான், நான் ஸ்டீல் பாடி. எனக்கு ஒன்றும் ஆகாது. நானெல்லாம் மாத்திரையே சாப்பிட மாட்டேன் என வீம்பு பேசித் திரியாதீர்கள் யாரும். மாத்திரைகள் கொண்டு தும்மல், இருமலைக் குறைப்பது நோய் பரவலைக் குறைக்கும். உங்கள் உடல் வேண்டுமானால் எதையும் சாதாரண சளியாகவே கடத்துவிடலாம். ஆனால் உங்களிடம் இருந்து நோய் கிருமியை வாங்கும் எல்லாருக்கும் அப்படியே சாதாரணமாக கடந்து விடாது. அது அவர்களின் உயிரையே பறிக்கலாம். நோயைப் பரப்பிக் கொலைகாரர்களாக மாறாதீர்கள். 

வயது வித்யாசமின்றி எல்லாருமே சுடுதண்ணீர் குடியுங்கள். ஐஸ்க்ரீம், குளிர் பானம், பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர், போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இவையெல்லாம் சாதாரண சளி ஏற்படுத்தினாலும் நமக்கு வீண் பயமும் பீதியும் உண்டாக்கும். குழப்பங்களைத் தவிர்க்க எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல். 

ஊருக்குப் போனதும் நண்பர்களைக் காணக் கூடாதீர்கள்.

இனிமேல் ஒவ்வொரு மனிதனும் வீட்டை விட்டு வெளியே வந்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பிறர்க்கு அவர்கள் தோண்டும் ஒரு சவக்குழி. தயவு செய்து எல்லாருமே வீட்டிற்குள்ளிருங்கள். இப்போது சொன்னது எல்லாம் ஊருலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும் பொருந்தும்.

பொது மக்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப வருபவர்கள் தயவு செய்து அந்த அந்த ஊராட்சிகளில் தகவல் தெரிவிப்பதுடன் , அந்த ஊரக பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிறுவனஙகள் அல்லது அரசு மருத்துவ மனைகளில் தானாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்வதுடன் , தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். இது கொரானாவுக்கு எதிரான உங்களது பங்களிப்பாக கருதி ஊராட்சி நிர்வாகத்திற்கு  உதவுங்கள். நேரில் வர இயலாதவர்கள் தங்களிடம் உள்ள ஊராட்சி பிரதிநிதிகள்(தலைவர், து.தலைவர்,வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள்,) ஒருவரது கைபேசி எண்ணிற்காவது தகவல் கொடுத்து உதவுங்கள், இது அனைத்து ஊராட்சிகளுக்கும் பொருந்தும். 

தயவு செய்து அரசும் மருத்துவர்களும் சொல்வதைக் கேளுங்கள். அறிவியலுக்கு எதிரான, மருத்துவர்கள் சொல்வதற்கு எதிரான, அரசு சொல்வதற்கு எதிரான எதையும் செய்யாதீர்கள். பரப்பாதீர்கள். சந்தேகங்கள் இருந்தால் ஹெல்ப் லைனிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
-044 29510 500

மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் அனைவரும். மனிதநேயம் தான், சுய ஒழுக்கம் தான் நம்மைக் காக்கும். 

தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். (Take things seriously. No more jokes in this issue. )

வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள, நோய்த் தொற்றைக் குறைக்க, பல உயிர்களைக் காக்க இதெல்லாம் கடைபிடியுங்கள்.

click me!