உறுதி அளித்த பிரதமர் மோடி.! நிம்மதி பெருமூச்சு விடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள்..!

By ezhil mozhiFirst Published Apr 22, 2020, 7:23 PM IST
Highlights

கொரோனா பாதித்தவர்களோடு தினமும் நெருங்கி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

உறுதி அளித்த பிரதமர் மோடி.! நிம்மதி பெருமூச்சு விடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள்..!

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க தன்னலமற்று மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்களும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களை அடையாளம் காணும்போது வாக்குவாதம் ஏற்படுவதும், அதனால் தாக்கப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

இது ஒரு பக்கமிருக்க கொரோனா பாதித்தவர்களோடு தினமும் நெருங்கி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் கொரோனாவால் உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் அவர்களின் உடலை புதைப்பதற்கு பொதுமக்கள் தடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்ற மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதிலும் தொய்வு இருக்கிறது என குற்றசாட்டு எழுந்தது.

இதன் காரணமாக மருத்துவ சங்கங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் ஆலோசனை நடத்தி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளது மத்திய அரசு.

click me!