திடீர் திருப்பம் - "ஜியோ - பேஸ்புக்"..! இந்தியாவை ஆட்டிப்படைக்க மாஸ்டர் பிளான் ரெடி!

By ezhil mozhiFirst Published Apr 22, 2020, 6:51 PM IST
Highlights

ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது  பேஸ்புக் நிறுவனம்

உலக அளவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் பேஸ்புக் நிறுவனம், இந்திய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியதன் மூலம்  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடன் சுமை சற்று குறைய வாய்ப்பு  உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை 5.7 பில்லியன் டாலருக்கு, அதாவது  இந்திய ரூபாயில் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால், இதன் மதிப்பு தற்போது 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.



இது குறித்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு என்றும் மக்களுக்கு  இன்னும் பல சிறந்த சேவையை வழங்க வழிவகை செய்து கொடுக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. பேஸ்பூப் நிறுவனம் தெரிவிக்கும் போது "இந்த முதலீடு இந்தியா மீதான எங்கள் உறுதிப்பாட்டை காட்டுகிறது. ஜியோ கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஜியோ 388 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது மிக பெரிய சாதனை.



மேலும் அதிக மக்களை  ஜியோவுடன் இணைக்கவும், அதிலும் குறிப்பாக இந்தியா முழுவதும் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதே தங்களின் நோக்கம் என்றும் பேஸ்புக் தெரிவித்து உள்ளது.



இதன் மூலம் ஜியோ மார்ட் தளத்துக்கும், வாட்ஸ் அப் தளத்திற்கும் இணைப்பு ஏற்படுத்த உள்ளதாக பேஸ்புக்  நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே ஜியோ வருகையால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்  நஷ்டத்தை சந்தித்து காணாமல் போயுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்துடன் கைகோர்த்து  உள்ளதால் மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் ஜியோ ஏற்படுத்தும் என எதிர்பார்த்து கிளம்பி உள்ளது.

 

click me!