கணவரே மனைவியை 2 மணி நேரத்திற்கு விற்ற கொடூரம்...! கேட்கும் போதே அதிர்ச்சியாகும் மக்கள்...!

thenmozhi g   | Asianet News
Published : Apr 22, 2020, 05:56 PM IST
கணவரே மனைவியை 2 மணி நேரத்திற்கு விற்ற கொடூரம்...! கேட்கும் போதே அதிர்ச்சியாகும் மக்கள்...!

சுருக்கம்

அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் தன் கணவரே 10 ஆயிரம் ரூபாய்க்கு சமரசம் செய்து, அதே பகுதியில் வசிக்கக்கூடிய இடைத்தரகர் காலித் என்பவருக்கு 2 மணி நேரம் விற்றதாகவும், காலித்  மற்றொருவருக்கு அப்பெண்ணை விற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கணவரே மனைவியை 2 மணி நேரத்திற்கு விற்ற கொடூரம்...! கேட்கும் போதே அதிர்ச்சியாகும் மக்கள்...!

கணவரே தன் மனைவியை இரண்டு மணி நேரத்துக்கு விற்ற சம்பவம் உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இது தொடர்பாக கடந்த திங்கள்கிழமையன்று அப்பெண்ணின் கணவரை பக்பாதா காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இதில் தொடர்புடைய இரண்டு இடைத்தரகர்களையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளது. இடைத்தரகர் இருவரில் ஒருத்தர் சம்பல் என்ற பகுதியை சேர்ந்தவர் என கைது செய்யப்பட்ட கணவர் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஹசம்பூர் சந்திப்பில் வசித்து வரும் பெண்ணின் பெற்றோர், தன் மகள் காணவில்லை என பக்பாதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் சுரேந்திர பால் சிங், சம்பல் பகுதியின் போலீசாரை தொடர்பு கொண்டு, விவரத்தை தெரிவித்து உள்ளார். பின்னர் ஒரு வழியாக அப்பெண்ணை மீட்டு உள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் தன் கணவரே 10 ஆயிரம் ரூபாய்க்கு சமரசம் செய்து, அதே பகுதியில் வசிக்கக்கூடிய இடைத்தரகர் காலித் என்பவருக்கு 2 மணி நேரம் விற்றதாகவும், காலித் மற்றொருவருக்கு அப்பெண்ணை விற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, காவலர்கள் தெரிவிக்கும் போது இது போன்று பல வழக்குகள் வந்துக்கொண்டு இருப்பதாகவும், தெரியாமல் மாட்டிக்கொள்ளும் பல பெண்களை மீட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சொந்த கணவரே மனைவியை விற்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்