அந்த பன்னிய பிடிச்சு லிஸ்டுக்கு வெளியில போடுங்க சார்: கலெக்டரை கதறவிட்ட சிட்டிசன்ஸ்

By Vishnu PriyaFirst Published Dec 19, 2019, 7:14 PM IST
Highlights

பின் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து முறையிடும்போது...
“அய்யா காட்டுப் பன்றிங்களோட டார்ச்சர் தாங்க முடியலை. அதை நாங்க விரட்டப்போயி, அதுங்க ஓடி விழுந்து ஏதாச்சும் அடிபட்டாலோ அல்லது அது எங்கேயோ வனசாலையில் வாகனத்தில் அடிபட்டாலோ கூட வனத்துறை ஆளுங்க ‘நீதான் வன விலங்கை அடிச்சு கொன்னிருக்க. 

நெல் எந்த மரத்தில் காய்க்கிறது? கோதுமை எந்த கடலில் விளைகிறது? என்று  நம்மில் பல லட்சம் பேருக்கு தெரியாது. ஆனால் எவனோ விளையவைத்து கொடுக்க, எவனோ அதை கொண்டு வந்து சேர்க்க, எவனோ விற்க, அதை அப்பன் வாங்கிக் கொடுக்க, அம்மா சமைத்துக் கொட்ட, நாமும் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு கைப்பிடி நெல்லை விளைய வைப்பதற்கு ஒரு விவசாயி என்னென்ன பாடு படுகிறான் என்பது  நமக்கு புரிவதில்லை. நெல் மட்டுமில்லை காய்கறிகள், பால் உள்ளிட்ட எல்லா உணவுப்பொருளின் உற்பத்தியும் மிகப்பெரிய உழைப்பின் மூலமே பெறப்படுகிறது. ஆனால் கிஞ்சிற்றும் அக்கறையில்லாமல் நாம் உணவை வீணடிப்பது, வீசி எறிவது என்று சர்வ அலட்சியமாய் நடந்து கொண்டு, உணவு அருளும் அன்னபூரணி தெய்வத்தை வருந்த வைக்கிறோம். 

உணவுப்பொருட்களை விளைய வைக்கும் விவசாயிகளுக்கு எதிரான விஷயங்கள பலப்பல. அதில் கடந்த சில வருடங்களாக இணைந்துள்ளது காடு தாண்டி, ஊரை நோக்கி வந்து, பயிர்ப் பிரதேசங்களுக்குள் படையெடுக்கும் வன விலங்குகள் தான். உணவுப்பயிர்களை தேடி வந்து தின்றும், மிதித்தும் அழிக்கும் விலங்குகளில் மிக முக்கியமானவரை யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள். இவை இப்படி காடு தாண்டி வருவதற்கும் மனிதனே காரணம். அவற்றின் வீடுகளான காடுகளின் பரப்பளவை மனிதன் சுருக்கிக் கொண்டே போவதாலும், அவற்றின் (வலசை) பாதை அடைபடுவதாலுமே அவை திசைமாறி ஊரை நோக்கி வருவது தொடர்கிறது. 

யானைகள், பன்றிகள் இவற்றில் எது மிக அபாயகரமானது? என்று கேட்டால்....’என்னாங்க லூசுத்தனமா கேக்குறீங்க. யானை தான்! அம்மாம் பெரிய உருவத்தை சமாளிக்கிறது சாதாரணமா? ஆனால் இந்த பன்னியை ரொம்ப சாதாரணமா டீல் பண்ணிடலாம்!’ என்று நீங்கள் பதில் சொல்லலாம் அசால்டாக. ஆனால் அது உண்மையில்லை. யானைக்கு நிகராக பன்றிகள் முரடானவை, அபாயகரமானவை. அவற்றை தோட்டத்தினுள் கண்டறிவதும், எதிர்கொள்வதும், விரட்டுவதும் மிக கடினமானது. விரட்டும் விவசாயி மீது பாய்ந்து ரணகளமாக்கிவிடும் இயல்புடையவை காட்டுப் பன்றிகள். 

அதேபோல் தினம் தினம் அவைகளால் ஏற்படும் பயிரிழப்பும், மனிதர் - காட்டுப்பன்றி மோதலால் உருவாகும் பெருங்காயங்கள், உயிரிழப்புகளும் அதிகமானவை. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி வனங்களின் எல்லை ஓர கிராமங்களில் பல கிலோமீட்டர்களுக்கு பயிர் நிலங்கள் உள்ளன. இவை காடுகளில் இருந்து சற்றே தொலைவில்தான் அமைந்துள்ளன. இதனால் இந்த பயிர்களுக்குள்ளும், வன ஓடைகளின் அருகிலும், புதர்களிலும், காடுகளிலும் இருந்து தினமும் இரவிலும், அதிகாலையிலும் படையெடுத்து வரும் காட்டுப் பன்றிகள் உணவுப் பயிர்களை அழித்து நொறுக்குகின்றன. 
அதிலும் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகளின் பெருக்கமும், அவற்றால் நேரும் தொல்லைகளும் மிகவும் அதிகமாம். இதனால் பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழந்த கிராம மக்கள், சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் போராட்டம் செய்தனர். 

பின் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து முறையிடும்போது...“அய்யா காட்டுப் பன்றிங்களோட டார்ச்சர் தாங்க முடியலை. அதை நாங்க விரட்டப்போயி, அதுங்க ஓடி விழுந்து ஏதாச்சும் அடிபட்டாலோ அல்லது அது எங்கேயோ வனசாலையில் வாகனத்தில் அடிபட்டாலோ கூட வனத்துறை ஆளுங்க ‘நீதான் வன விலங்கை அடிச்சு கொன்னிருக்க. இது சட்டப்படி குற்றம்.’ன்னு சொல்லி ஃபைன் போடுறாங்க, கைது பண்றாங்க. ஆனால் பன்றிகளால் எங்களுக்கு நடக்கும்  பயிரிழப்புக்கும், காயங்களுக்கும் எந்த நிதியுதவியோ, ஈடு பணமோ, ஆறுதலோ கிடைக்கிறதில்லை. அதனால காட்டுப்பன்றியை உடனடியா ‘வன விலங்குகள்’ பட்டியலில் இருந்து தூக்குங்க சார். அப்பதான் நாங்க பயமில்லாமல் அதை விரட்ட முடியும்.” என்று குமுறிவிட்டனர். இவர்களின் ஆவேசத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்  கலெக்டர். பலவருடங்களா வன விலங்கு பட்டியலில் இருக்கிற பன்றியை எப்படி தடாலடியா அதிலிருந்து நீக்கிட முடியும்? என்பதே அவரது அதிர்ச்சிக்கு காரணம். பின் அவர்களை சமாதானம் செய்து சில உறுதிகளும், நம்பிக்கையும் அளித்து அனுப்பி வைத்தார் ஆட்சியர்.  ”பன்றிக்கு குட்பை சொல்லி, பட்டியலில் இருந்து நீக்கினால். வென்றிடலாம் கிராம மக்களின் மனதை!”
செய்வார்களா ஆளுங்கட்சியினர்!?
 

click me!