
சபாஷ் சென்னை போலீஸ் ..! தலைக்தெறிக்க ஓடிய டுபாக்கூர் ஸ்டுடென்ட்ஸ்..!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் ஒரு சில அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் சென்னையிலும், மாநிலக் கல்லூரிக்கு இன்று முதல் 1ம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் போராட்டத்தை தடுக்க காவலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் காரணமாக கூட்டாக மாணவர்கள் எங்கு சென்றாலும் சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தியதால் விக்னேஷ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாநிலக் கல்லூரிக்கு உட்பட்ட விக்டோரியா மாணவர் விடுதியும் மூடப்பட்டது.
இந்த நிலையில்,குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பரவும் போராட்டங்கள் காரணமாக பெங்களூரில் இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த ஒரு தருணத்தில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் திடீரென சில மாணவிகள், கையில் பதாகைகள் ஏந்திய வண்ணம் போராட்டம் செய்ய முற்பட்டனர்.
தமிழ் தெரியாத வட மாநில மாணவிகளான அவர்களிடம் போலிசார் விசாரித்தனர்.அவர்களிடம் நீங்கள் கல்லூரி மாணவிகளா..? எந்த கல்லூரி? உங்க அடையாள அட்டையை காண்பியுங்கள் என கேட்கவே .. நைசா எதையும் தெளிவாக சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர் மாணவிகள்.
மேலும் அவர்களிடம் எந்த ஐ.டி கார்டும் இல்லையாம். எனவே போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்த பெண்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.