கணவன்களிடம் பெண்கள் கேட்க தயங்கும் அந்தரங்க கேள்விகளும் விரிவான பதில்களும்! – பார்ட் 2

By sathish kFirst Published Oct 5, 2018, 10:56 AM IST
Highlights

பொதுவாகவேஇச்சை எண்ணங்கள் தோன்றுவதில்லை என்றால் உறவில் பாதிப்புக்கு வாய்ப்புகள் இல்லை. சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவையும் காரணமாக இருக்கலாம் இதற்கு உடலுறவுதான் தீர்வு.

கேள்வி : செக்ஸில் ஈடுபட விருப்பம் இல்லை என்பது, உறவு மோசமாகி வருவதன் அறிகுறியா?

பதில்: பொதுவாகவேஇச்சை எண்ணங்கள் தோன்றுவதில்லை என்றால் உறவில் பாதிப்புக்கு வாய்ப்புகள் இல்லை. சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவையும் காரணமாக இருக்கலாம் இதற்கு உடலுறவுதான் தீர்வு. அதனால் இயற்கையாக மன அழுத்தம் குறைகிறது. நல்ல உறக்கம் அளிப்பது மட்டுமின்றி உடலில் கலோரிகள் குறையவும் உதவுகிறது.

துணையை செக்ஸியாக உணரவில்லை என்றால், இச்சை ஏற்படவில்லை என்றால் இருவரும் சேர்ந்து தான் தீர்வு காண வேண்டும்.

கேள்வி : துணையிடம் கலவியில் எது பிடிக்கும் என எப்படி கூறுவது?

பதில்: விருப்பத்தை வெளிப்படையாகக் கூறினால் கணவர் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடும் என நினைப்பதற்கு மாறாக பெரும்பாலான ஆண்கள் விருப்பத்தை கூறினால் பாசிட்டிவாகத் தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

நேரடியாக கூற தயக்கம் இருந்தால், கனவு, தோழி, திரைப்படக் காட்சிகள் உள்ளிட்டவை மூலம் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்

கேள்வி : கர்ப்பமாக இருக்கும் போது செக்ஸில் ஈடுபடலாமா?

பதில்: கருத்தரித்த பிறகும் கூட குறிப்பிட்ட காலம் வரை உடலுறவில் ஈடுபடலாம். அது பெண்ணையும், சிசுவின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியையும் பொறுத்திருக்கிறது

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், பெண்கள் அதிகம் உச்சக்கட்ட இன்பம் அடைகிறார்கள். இந்த காலத்தில் அவர்கள் இடுப்பு பகுதியில் அதிகமாக செல்லும் இரத்த ஓட்டமும் காரணம் என கூறப்படுகிறது.

கேள்வி : வேக்ஸிங் செய்வது செக்ஸில் தாக்கம் ஏற்படுத்துமா?

பிறப்புறுப்பில் முடிகளை நீக்கிய பிறகு செக்ஸில் ஈடுபடும் போது, படுக்கை அறையில் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படுவதாக 2500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சர்வே  தெரிவிக்கிறது

கேள்வி : பெண்கள் செக்ஸில் அதிக ஆர்வம் கொள்ளும் வயது எது?

பதில்: பெண்களிடம் 27வது வயதில் இருந்து செக்ஸ் மீதான் நாட்டம் அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் 45 - 52 வயதில் செக்ஸ் ஆர்வம் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.


கேள்வி : செக்ஸ் டாய்கள் பயன்படுத்துவது சரியா?

பதில்: செக்ஸ் டாய்கள் பெண்கள் எளிதாக உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவுகின்றன. ஆனால் மென்மையாக பயனபடுத்த வேண்டும்.

கேள்வி : குழந்தை பெற்ற பிறகு, எப்போது மீண்டும் செக்ஸில் ஈடுபடலாம்? 

பதில்: ஒருவேளை உங்கள் பிரசவம் சுகப்பிரசவம் மற்றும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை எனில் நீங்கள் ஆறில் இருந்து எட்டு வாரங்கள் கழித்து சாதாரணமாக உடலுறவில் ஈடுபடலாம். ஒருவேளை பிரசவத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், மருத்துவர்கள் கூறும் காலம் வரை உடலுறவை தவிர்க்க வேண்டியது கட்டாயம்.

click me!