கொளுத்தும் வெயில்..! மக்கள் பெரும் அவதி..! சாதாரணமாகவே 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவு...!

By ezhil mozhiFirst Published Apr 4, 2019, 1:25 PM IST
Highlights

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் சுட்டெரித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்ததாவது...
 

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் சுட்டெரித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்ததாவது...

"தமிழகத்தை சுற்றி நிலப்பகுதியிலும், கடலோர பகுதிகளிலும் காற்று சுழற்சி தற்போது ஏதும் இல்லை..இதன் காரணமாகவே தமிழகத்தின் பல உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட மூன்று முதல் ஐந்து டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று மாலை பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையின் விவரம் இதோ... கரூர் பரமத்தியில் 104 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, மதுரை தர்மபுரி 101 டிகிரி, கோவை பாளையங்கோட்டை நாமக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

மேலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்றும் அனல் காற்றும் அவ்வப்போது வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!