67 வயதாகும் பில் கேட்ஸ் டென்னிஸ் மீதான தனது ஆர்வத்தால் தனது புதிய காதலியைக் கண்டுபிடித்து டேட்டிங் செய்துவருகிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டாவுடனான தனது 34 ஆண்டுகால உறவை முடித்துக்கொண்டார். விவாகரத்து பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் காதல்வயப்பட்டுள்ளார். டென்னிஸ் ஆர்வலரான பவுலா ஹர்டுடன் அவர் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. பில் கேட்ஸ் உடன் டேட்டிங் செய்யும் பவுலா ஹர்ட் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பவுலா ஹர்ட் யார்?
பவுலா ஹர்ட் ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் இணை தலைமை செயல் அதிகாரியாக இருந்த மார்க் ஹர்டின் மனைவி. மார்க் ஹர்ட் என்சிஆர், ஹெவ்லெட்-பேக்கர்ட், ஆரக்கிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வெற்றிகரமாக செயல்பட்டுவந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு தனது 62 வயதில் காலமானார். அப்போது அவரது சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்.
கோடீஸ்வரா இருந்தாலும் மனைவியை பிரிந்தால் சமைக்கணும்ல.. சப்பாத்தி உருட்டும்போது திணறிய பில்கேட்ஸ்!
மார்க் ஹர்ட்
மார்க்கின் மனைவியான பவுலா ஒரு காலத்தில் தொழில்நுட்ப நிர்வாகியாக இருந்தவர். இப்போது பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் அமைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.
பவுலா – மார்க் இருவருக்கும் இரண்டு மகள்கள் பிறந்தனர். குடும்பத்துடன் சான் மேடியோ கவுண்டியில் வசித்தனர். பவுலாவும் மார்க்கும் பேய்லர் பல்கலைக்கழகத்திற்கு நீண்டகாலமாக நன்கொடை வழங்கி ஆதரவு அளித்து வருகிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு 1.1. பில்லியன் டாலர் நிதி திரட்ட இவர்கள் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளனர். இவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பல்கலைக்கழகத்தில் இவர்களுடைய பெயர் சூட்டப்பட வரவேற்பு மையம் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்ட உள்ளது.
டென்னிஸ் ரசிகர்
பவுலா ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் பட்டம் பெற்றவர். கணவரின் மறைவுக்குப் பினகும் பேய்லர் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து ஆதரித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழகம் நடத்தும் தேசிய சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு நிதி உதவி செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின்போது இளம் டென்னிஸ் வீரர்களுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த திட்டம் 2022 மார்ச் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
டேட்டிங் ஆரம்பித்தது எப்போது?
60 வயதான பவுலா ஹர்டும் 67 வயதான பில் கேட்ஸும் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து வருகிறார்கள் என அவர்களுக்கு நெருக்கமான நண்பர் கூறியதாக ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.
27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 இல் அவரது மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸிடமிருந்து பிரிந்தார் பில்கேட்ஸ். இப்போது பவுலா ஹர்டுடனான உறவு ஏற்பட்டுள்ளது.
அதிசயத்தைப் பாருங்க! மஞ்சள் கருவுக்குப் பதில் பச்சை கருவுடன் முட்டையிடும் கோழிகள்!
சென்ற ஆண்டு மார்ச் மாதம் இந்தியன் வெல்ஸில் நடந்த மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் அரையிறுதிப் போட்டியை பவுலாவும் பில் கேட்ஸும் ஒன்றாகப் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தனர். ஆனால், 2015ஆம் ஆண்டே கலிபோர்னியாவில் நடந்த ஒரு டென்னிஸ் போட்டியில், பவுலா ஹர்ட் பில் கேட்ஸ்க்கு பின் இருக்கையில் போட்டியைப் பார்த்திருக்கிறார். கேட்ஸ் மற்றும் ஹர்ட் இருவரும் தொழில்நுட்ப உலகில் முக்கியமானவர்கள். அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள உறவு ஆச்சரியமானது அல்ல.
கடந்த மாதம், மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனிலும் இருவரும் ஒன்றாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியைப் அவர்கள் சேர்ந்து பார்த்தனர். ஆனால் பிறகு பில்கேட்ஸ் சிட்னி சென்றபோது ஹர்ட் அவருடன் இல்லை.
பல டென்னில் விளையாட்டு நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டதால், டென்னிஸ் மீதான ஈடுபாடு காரணமாக இருவரும் காதலில் இணைந்திருக்கலாம்.
Jio 5G இப்போது மேலும் 17 நகரங்களில் விரிவாக்கம்! எந்தெந்த இடங்களில் 5ஜி உள்ளன?