அதிர்ச்சி: 10000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவது தவிர வேறு வழியில்லை..! குமுறும் பார்லே ஜி நிறுவனம்..!

Published : Aug 21, 2019, 04:33 PM IST
அதிர்ச்சி: 10000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவது தவிர வேறு வழியில்லை..! குமுறும் பார்லே ஜி நிறுவனம்..!

சுருக்கம்

பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி நிறுவனம் நஷ்டத்தின் காரணமாக 10 ஆயிரம்  ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு எடுத்து உள்ளதாக தகவல் தெரியவந்து உள்ளது 

பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி நிறுவனம் நஷ்டத்தின் காரணமாக 10 ஆயிரம்  ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு எடுத்து உள்ளதாக தகவல் தெரியவந்து உள்ளது 

hide and seek  உள்ளிட்ட பிஸ்கட்களை பார்லே ஜி நிறுவனம தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்து வந்தது.

ஆனால் பிஸ்கட் மீதான வரிவிதிப்பு 5 முதல் 12 சதவீதம் வரை இருந்ததை தற்போது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் விற்பனை சரிந்தது.15 சதவீத வரி விதிப்பின் காரணமாக விற்பனை மந்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி 12 விழுக்காடு அளவிற்கு வரி விதிப்பு இருக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது நிறுவனம்.

இந்த கோரிக்கையை ஏற்றால் நன்றாக இருக்கும் என்றும் இல்லை எனில், நிறுவனத்திலிருந்து குறைந்தது 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டி வரும் என அந்நிறுவன தலைவர் மைதீன் ஷா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஊழியர்கள் பெரும் பதற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து