உஷார் மக்களே..! 10 ஆயிரம் அபராதம் போட்டுட்டாங்க போலீஸ்..! மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீங்க ..!

By ezhil mozhiFirst Published Aug 21, 2019, 4:05 PM IST
Highlights

ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியான இன்று சந்தோஷ் என்ற நபருக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை கொடுத்து உள்ளனர்.

மக்கள் நலனில் போக்குவரத்து காவல்துறை எவ்வளவுதான் அக்கறை காண்பித்தாலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு கொண்டு வந்தாலும் இன்றளவும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களை சாலைகளில் பார்க்கமுடிகிறது.

அதேவேளையில் ஆங்காங்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதும் ஒரு பக்கம் பார்க்கமுடிகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் ஹெல்மெட் போடவில்லை என்றால் அவரது தொகை ரூபாய் 100 என இருந்தது. எனவே 100 ரூபாய் அபராதமாக செலுத்துவதற்கு அப்படி ஒரு தயக்கம் யாரும் காண்பிப்பது கிடையாது.

இந்த நிலையில் அபராத தொகையை அதிகரித்து மோட்டார் வாகன சட்ட திருத்தம் கொண்டு வந்து புதிய முறையை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூபாய் 1000 அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அபராத தொகை 10 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியான இன்று சந்தோஷ் என்ற நபருக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை கொடுத்து உள்ளனர்.இதற்கான அவரது தொகையை எக்மோர், எக்மோர் டவுன், சைதாப்பேட்டை நீதிமன்றம் .. இதில் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தியபின் பெறப்பட்ட கட்டண ரசீது உங்களுக்காக...

எனவே பொது மக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. மது நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு என்பதை ஏற்று மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிருங்கள்.

click me!