பெற்றோர்களே.. நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு.. உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை பாதிக்கும்.. ஜாக்கிரதை!

By Kalai Selvi  |  First Published Jul 15, 2024, 10:31 AM IST

பெற்றோர்கள் செய்யும் சில தவறு பெரும்பாலும் அவர்களுக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரிக்க செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த கட்டுரையில் பெற்றோர்கள் செய்யும் அந்த தவறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பது மிகவும் சவாலாகிவிட்டது அவரவர் வசதிக்கேற்ப தங்களால் இயன்றதை அவர்களுக்கு  வழங்குகிறார்கள். அவர்களுக்கு நல்ல பள்ளியில் கல்வியையும், அழகான ஆடைகளையும், விலையுயர்ந்த பரிசுகளையும் வழங்குகிறார்கள். ஆனால் இது எல்லாவற்றையும் விடவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு 'நேரம்' தான்.

பணத்தின் அடிப்படையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பலவிதமான வசதிகளை வாரி வழங்குகிறார்கள். ஆனால், இந்த பணத்தை சம்பாதிக்கும் ஓட்டத்தில் அவர்கள் இருப்பதால் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு சரியாக நேரம் கொடுக்க முடியாமல் போகிறது.

Tap to resize

Latest Videos

அத்தகைய சூழ்நிலையில், உங்களது பிஸியான கால அட்டவணையில் உங்களது ஒரு பழக்கத்தை குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். அது வேறு எதுவும் இல்லை மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்துவது தான். மொபைல் போன் பயன்படுத்துவது ஒரு பொதுவான பழக்கமாகும். ஆனால், அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் ல் தூரத்தை ஏற்படுத்தும் தெரியுமா? இதுகுறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Parenting Tips : உங்க குழந்தை ஸ்கூல் விட்டு வந்தவுடன் முதல்ல 'இந்த' கேள்விகளைக் கேளுங்கள்..!

மொபைல் போன் எப்படி தூரத்தை உண்டாக்கும்?
மொபைல் போனில் நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். எப்படியெனில், உங்கள் குழந்தை உங்களது கவனத்தை இருப்பதற்கு முயற்சிக்கும் போது, நீங்கள் அவர்களிடம் கத்துகிறீர்கள். ஆனால், இப்படி செய்வதால் உங்கள் குழந்தை பயந்து மீண்டும் உங்கள் அருகில் வர தயங்கும். இதனால் அவர்கள் உங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் தவறுகளில் ஈடுபடலாம். முக்கியமாக அவர்கள் உங்களிடம் எதையும் பகிர்ந்து கொள்வதை கூட தவிர்ப்பார்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கு இடையே உள்ள தூரத்தை உண்டாக்கும்.

இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே உங்க குழந்தை அதிக நேரம் போன் யூஸ் பண்றாங்களா..? அப்ப உடனே 'இத' செய்ங்க..

குழந்தைகளும் மொபைல் போன் பயன்படுத்துவது:
மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் இரண்டாவது பெரிய தவறு தங்கள் வேலையை எளிதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே மொபைல் போனை கொடுத்து பழக்குகிறார்கள். இதனால் குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

பெற்றோர்கள் வேலையில் பிஸியாக இருப்பதால் அவர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல் போனில் என்ன பார்க்கிறார்கள் என்று கண்காணிப்பதும் இல்லை, மொபைல் பார்ப்பதற்கு வரம்புகளை அமைப்பதும் இல்லை. நாள் இதனால் அவர்களது எதிர்காலம் மோசமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக குழந்தைகள் பல வகையான மன அழுத்தம் மற்றும் உடல் நோய்களுக்கு ஆளாக நேரிடும். மேலும் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே தூரத்தை அதிகப்படுத்தும்.

இதை குறைக்க என்ன வழி?
மொபைல் இல்லாமல் இன்றைய வாழ்க்கை கடினமானது அதனால் தான் நீங்கள் விரும்பாவிட்டாலும் அதை பயன்படுத்துகிறீர்கள்.  ஆனால் சில விஷயங்களை செய்வதன் மூலம் மொபைலில் இருந்து உங்களை தூரமாக வைத்துக் கொள்ள முடியும். அவை..

  • நாள் முழுவதும் குழந்தைகளுடன் கண்டிப்பாக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுங்கள்.
  • அவர்களிடம் பேசும் போது அன்னாள் நடந்த அனுபவங்களை கேட்டு உங்களின் அனுபவங்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • அவர்களுடன் சேர்ந்து சில ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுங்கள்.
  • வெளியில் அல்லது பூங்காவிற்கு சென்று திறந்த வானத்தில் கீழ் உங்கள் குழந்தைகள் உடன் விளையாடுங்கள்.
  • சாப்பிடும் ஒருபோது ஒருபோது மொபைலை பயன்படுத்த கூடாது.
  • உங்கள் குழந்தை உங்கள் அருகில் இருக்கும் போது அல்லது உங்களை பார்த்து அவர்கள் வளரும் போது மொபைல் ஃபோனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மேலே சொன்ன இந்த விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் உங்கள் குழந்தைகளை உங்களுடன் இணைக்கும். அதுபோல, நீங்கள் உங்கள் தொலைபேசியை எடுக்கும் போது இந்த விஷயங்களை மனதில் வைத்து நடந்தால், உங்களது உறவு ஆழமாக பாதிக்கப்படாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!