5 நாட்களில் கொரோனாவை குணமாக்கும் சித்த மருத்துவம்... கை கொடுக்கும் பாரம்பரிய சிகிச்சை…!

Published : Sep 07, 2020, 01:40 PM IST
5 நாட்களில் கொரோனாவை குணமாக்கும் சித்த மருத்துவம்... கை கொடுக்கும் பாரம்பரிய சிகிச்சை…!

சுருக்கம்

 நடைப்பயிற்சி, நிலா சோறு, குழந்தைகளுக்காக வேப்பிலை ஊஞ்சல், மண்பானையில் ஆவி பிடித்தல் என அனைத்து பாரம்பரிய முறைகளையும் கடைப்பிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 
திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ முகாமில் கொரோனா நோயாளிகள் ஐந்து நாள் சிகிச்சையில் புத்துணர்ச்சி பெற்று கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் நாற்றாம்பள்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் சித்த மருத்துவ சிறப்பு முகாம் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு மூலிகைகளால் ஆன முகக்கவசம் வழங்கப்படுவதோடு நோயாளிகளுக்கு நுரையீரல் தொற்றை தடுக்கும் வகையில் வெற்றிலை மருந்து, தேன் கலந்த மருத்துவம் போன்றவை அளிக்கப்படுகிறது.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை சூப், கசாயம், சிறுதானிய உணவுகள், மண் பானை சமையல் போன்றவை வழங்கப்படுகிறது. நடைப்பயிற்சி, நிலா சோறு, குழந்தைகளுக்காக வேப்பிலை ஊஞ்சல், மண்பானையில் ஆவி பிடித்தல் என அனைத்து பாரம்பரிய முறைகளையும் கடைப்பிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் 5 நாட்களிலேயே கொரோனா நோயாளிகள் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்பி வருகின்றனர். மேலும் இங்கு தனி தனி அறை ஒதுக்கப்பட்டு விளக்குகள் ஏற்றி தியான சிகிச்சையும் அளிக்கப்படுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்