திருவண்ணாமலை கிரிவலம் : 2 முக்கிய விஷயங்களுக்கு தடை..!

First Published Apr 21, 2018, 12:36 PM IST
Highlights
onjection for thiruvannamalai girivalam


வருடம் தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியன்று வெகு விசேஷமாக  பார்க்கப்படுகிறது. சித்திரை மாதம் பவுர்ணமி என்றாலே, பல்வேறு  கோவில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, சாமி தரிசனம் பெறுவர்

அதில் குறிப்பாக,திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள்  அதிகமாக இருப்பாகள். ஆண்டு தோறும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஏராளம்.

வரும் 29-ம் தேதி சித்ரா பெளர்ணமி வருகிறது. இன்றைய தினத்தில் மலை எறியும், கற்பூரம் ஏற்றியும் வழிப்படுவார்கள்

ஆனால் இந்த ஆண்டு வரும் பக்தர்கள் யாரும் மலை ஏறவும், கர்பூரவும் ஏற்றக் கூடாது என நிர்வாகம் தெரிவித்து உள்ளது.கோடை காலம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆண்டு  யாரும் மலையேறவும், கற்பூரமும் ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது

இதற்கு முன்னதாக, குரங்கணி காட்டு தீ ஏற்பட்ட பல உயிர்களை பறித்தது எனபது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்காக 2,100 சிறப்பு பேருந்துகளும்,14  சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. 

click me!