ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் ஃபிரீ !! சும்மா பிச்சுகிட்டு போகுது ஃபோன் விற்பனை !!

By Selvanayagam PFirst Published Dec 6, 2019, 10:36 PM IST
Highlights

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்ற அறிவிப்பால் செல்போன் விற்பனை  பல மடங்கு அதிகரித்துள்ளது.
 

நாடு முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம், குறைந்த விளைச்சல் என்று பல காரணங்கள் இருந்தாலும், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதுவும் தற்போது சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கு என கூறப்படுகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியின் லகுரபிர் என்ற இடத்தில் செல்போன் கடையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அறிவிப்புக்கு பின்னர் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், செல்போனை நிறைய பேர் வாங்க வருவதாகவும் கடைக்காரர் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் ஒரு கிலோ வெங்காயம் 130 முதல் 135 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

click me!