3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு...!

By ezhil mozhiFirst Published Dec 6, 2019, 6:27 PM IST
Highlights

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு...! 

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் குறிப்பாக மூன்று மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று தஞ்சாவூர் திருவாரூர் ராமநாதபுரம் தூத்துக்குடி தென்காசி நெல்லை கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யவும், புதுக்கோட்டை சிவகங்கை நாகப்பட்டினம் இந்த மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஒருவாரமாக இருப்பது போலவே, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில சமயத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
click me!