சீனாவில் இருந்து சென்னைக்கு அவசரமாக வருகிறது "ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள்! அரை மணி நேரத்தில் ரிசல்ட்!

By ezhil mozhiFirst Published Apr 10, 2020, 7:27 PM IST
Highlights

நாளை சீனாவிலிருந்து டெஸ்ட் கிட்டுகள் சரக்கு விமானம் மூலம் நேரடியாக சென்னைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று வேகமெடுத்து இருக்கும் இந்த ஒரு தருணத்தில் கொரோனா  அறிகுறிகளுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



இது தவிர தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலரும் கொரோனா அறிகுறிகளால் இருப்பதால் அவர்களுக்கு விரைவில் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர் ஆனால் பரிசோதனை செய்வதற்கான டெஸ்ட் கிட்டுகள் போதுமானதாக இல்லை. இந்த ஒரு நிலையில் சீனாவில் இருந்து நாளை சென்னைக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கொண்டு நடத்தப்படும் சோதனை மூலம் வெறும் அரை மணி நேரத்தில் பாதிப்பு கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு முன்னதாக "ஒரு லட்சம் டெஸ்ட் கிட்டுகளை" வாங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஒரு நிலையில் நாளை சீனாவிலிருந்து டெஸ்ட் கிட்டுகள் சரக்கு விமானம் மூலம் நேரடியாக சென்னைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் பல்வேறு நபர்களுக்கு இந்த கிட்டுகள்  மூலம் சோதனை செய்து அரை மணி நேரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!