தொடங்கியது ஆன்லைன் வகுப்பு! "லைவ் வீடியோ" மூலம் பாடம் எடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி..!

By ezhil mozhiFirst Published Apr 10, 2020, 7:17 PM IST
Highlights

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி இந்த ஆண்டுக்கான வகுப்புகளை வாட்ஸ்அப் மூலம் தொடங்கி இருக்கின்றது. 

தொடங்கியது ஆன்லைன் வகுப்பு...!  "லைவ்  வீடியோ மூலம் பாடம் எடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி..!   

கொரோனா எதிரொலியாக  21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இதற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஒரு நிலையில் பத்தாம் வகுப்பு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி அடுத்த மாதம் அதாவது மே மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதற்காக இப்போதே மாணவர்கள் படிக்க தொடங்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த ஒரு நிலையில் பதினோராம் வகுப்பு தேர்வு பற்றிய எந்த விவரமும் இல்லை. மேலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நடந்து முடிந்துவிட்டது.

இந்த ஒரு நிலையில் தற்போது குழந்தைகள் அவரவர் வீட்டில் ஹோம் ஒர்க் செய்வதும், விளையாடிக் கொண்டிருப்பதுவுமாக இருக்கின்றனர். இந்த ஒரு நிலையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி இந்த ஆண்டுக்கான வகுப்புகளை வாட்ஸ்அப் மூலம் தொடங்கி இருக்கின்றது. அதாவது வீட்டில் இருந்துக்கொண்டே வாட்ஸ்அப் உதவியுடன் ஆன்லைனில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். மாணவர்களும் அதில் இருக்கக்கூடிய சந்தேகங்களை வாட்ஸப் மூலமாகவே ஆசிரியர்களிடம் கேட்கின்றனர்.

அவ்வாறு தினமும் காலையில் இருந்து மாலை வரை சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களிலிருந்து, மாலை நேரத்தில் ஹோம் ஒர்க் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் வாட்ஸ் ஆப் மூலமாகவே ஆசிரியருக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆசிரியரும் அதனை படித்துவிட்டு திருத்தம் செய்து மீண்டும் மாணவர்களுக்கு அனுப்புகின்றனர். மாணவர்கள் எந்த வகையிலும் கல்வி கற்பதில் தடை இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறோம் என கேந்திரிய பள்ளி நிர்வாகமும் குறிப்பிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!