மிக பயங்கரம்... மனிதனை அச்சுறுத்தும் மனித மூஞ்சி கழுகு...!! சமூக வலைதளத்தில் பரவி பீதியை கிளப்பி வருகிறது...!!

Published : Oct 07, 2019, 06:38 AM ISTUpdated : Oct 07, 2019, 06:42 AM IST
மிக பயங்கரம்... மனிதனை அச்சுறுத்தும் மனித மூஞ்சி கழுகு...!! சமூக வலைதளத்தில் பரவி பீதியை கிளப்பி வருகிறது...!!

சுருக்கம்

அந்த கழுகின் கூர்மையான அலகும் அதன் விழிகள் மனிதனின் விழிகளை ஒத்ததாக உள்ளது. கிட்டத்தட்ட மனிதனை போலவே அதன் முகத்தோற்றும் உள்ளதால்  காண்போரை அது மிரளவைப்பதாக உள்ளது.

காண்போரை அச்சுறுத்தும் வகையில் மிகக் கொடூர உருவத்துடன் காட்சியளிக்கும் ராட்சத கழுகு ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பீதியை கிளப்பி வருகிறது.

அது  கழுகா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா, என்ற அச்சத்தையும்  ஏற்படுத்தும் வகையில் அதன் தோற்றம் மிகக் கொடூரமாக இருப்பதே அதற்கு காரணம்.  கழுகு என்றாலே  கூர்மையான  அதன் அலகும், ஈட்டி போன்ற நகங்களும் அச்சுறுத்தும் அதன்  உருவமும்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் கழுகில் பல வகைகள் உண்டு என்றாலும்  தற்போது கழுகு இனம்  90 சதவிகிதத்திற்கு மேல் அழிந்து இன்னும் சில வருடங்களில் அதன் இனமே இல்லாமல் போகும் ஆபத்து  ஏற்பட்டுள்ளது. புவியின் சுற்றுச்சூழலுக்கும், அதன் பல்லுயிர் பெருக்கத்திற்கும், உணவுச் சங்கிலிக்கும் மிகமுக்கியமான பறவையாக இருந்து  மனித  இனம் தழைக்க மிக முக்கிய காரணிகளில் ஒன்றான கழுகு இனம் அழிந்து வருவது பூமியின் அழிவிற்கான அறிகுறி என அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

 

மனித இனம் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே கழுகு இனத்தின் அழிவு கருதப்படுகிறது. இந் நிலையில் ராட்சத கழுகு ஒன்றின் புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் புகைப்படத்தை மரிசா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், அவர் அந்த கழுகின் அருகில் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உலாவருகிறது.  அதில் உள்ள கழுகு இதுவரை நாம் யாரும் கண்டிராக முகத்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. அந்த கழுகின் கூர்மையான அலகும் அதன் விழிகள் மனிதனின் விழிகளை ஒத்ததாக உள்ளது. கிட்டத்தட்ட மனிதனை போலவே அதன் முகத்தோற்றும் உள்ளதால்  காண்போரை அது மிரளவைப்பதாக உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பெற்றோரே! 5 வயசு வரைக்கும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க... ரொம்ப மோசமான பாதிப்பு
Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!