​ஜனவரி நடுவில் இருந்து தொடங்குகிறது ஒமிக்ரான் வேட்டை... மருத்துவர் கடும் எச்சரிக்கை..!

Published : Dec 27, 2021, 07:13 PM IST
​ஜனவரி நடுவில் இருந்து தொடங்குகிறது ஒமிக்ரான் வேட்டை... மருத்துவர் கடும் எச்சரிக்கை..!

சுருக்கம்

முறையான தரமான 3 அடுக்குள்ள முகக்கவசங்களை அணியுங்கள் அல்லது சர்ஜிக்கல் முகக் கவசங்களை அணியுங்கள்.

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தம் 578 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று நாடு முழுவதும் 7,141 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த மீட்பு எண்ணிக்கை 3,42,37,495 ஆக உள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 142, மகாராஷ்டிரா 141, கேரளா 57, குஜராத் 49, ராஜஸ்தான் 42, தெலுங்கானா 41, தமிழ்நாடு 34 மற்றும் கர்நாடகா 31 ஆக அதிக எண்ணிக்கையில் ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. டிசம்பரில் இருந்து இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்தது. நாட்டில் ஒரே நாளில் 290 ஓமிக்ரான் மாறுபாடு வழக்குகள் பதிவாகியுள்ளது. டெல்லியில்  இரவு ஊரடங்கு சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படும்.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்த நிலையில், தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் இரவு நேர ஊரடங்கு எந்த பலனையும் அளிக்காது எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


அதில், “கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை. முறையான தரமான 3 அடுக்குள்ள முகக்கவசங்களை அணியுங்கள் அல்லது சர்ஜிக்கல் முகக் கவசங்களை அணியுங்கள். பொதுவெளியில் கூட்டம் கூடுவதோ, கூட்டங்களிலோ செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மறவாமல் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளுங்கள். ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்