
இங்கிலாந்தை போன்று இந்தியாவில் ஒமிக்ரான் பரவினால் நாள் ஒன்றுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படுவது உறுதி என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 93,045 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் குழந்தைகளை தவிர 100% தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருந்து வருவது அந்நாட்டு அரசுகலை கவலை அடைய செய்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் 113 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஐரோப்பாவில் ஒமிக்ரான் பரவும் வேகத்தை இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் நாள் ஒன்றுக்கு 14 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். இப்போது பண்டிகைக் காலம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை என்று வரிசையாக வரவிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஒமிக்ரான் மிதமான அளவில்தான் தொற்று இருந்து வருகிறது. ஒவ்வொரு கொரோனா பரிசோதனை சாம்பிளையும் ஜெனோம் வரிசைப்பாடு செய்வது கடினம். அது கண்காணிப்பு, பெருந்தொற்று பரவல் எச்சரிக்கை உத்தியாகும், அதை வைத்து நோய்க்கணிப்பு செய்ய முடியாது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000த்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நாடுகளில் ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம் என வி.கே.பால். தெரிவித்துள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.