தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?. காரணம்  இதோ.... !!!!

 
Published : Oct 28, 2016, 02:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?. காரணம்  இதோ.... !!!!

சுருக்கம்

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?. காரணம்  இதோ.... !!!!

காத்திருந்த  தீபாவளி   வந்தாச்சி,  பட்டாசு ரெடியா  இருக்கு........ பலகாரம்  ஒரு பக்கம்  ரெடியா  இருக்கு....... இதெல்லாம் ஓகே..... ஆனால்,  தீபாளியன்று    எதற்கு , தலையில்  எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்  என  சில  சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.........

இதோ உங்களுக்கான  விளக்கம் ...:

தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா.

இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள்.

 பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும்.

எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம்.

ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும்...    

இது தான் ஐதீகம்.......!! என  நம்  முன்னோர்கள்  சொல்லி இருக்கிறார்கள்...

நல்ல  விஷயம் தானே ..........  ஏற்று கொள்ளலாமே ......!!!                 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை