வானத்தில் தோன்றிய "இந்திய வரைபடம்"..! இந்த அதிசயத்தை பார்த்து மகிழுங்கள்..!

By ezhil mozhiFirst Published Mar 5, 2020, 6:22 PM IST
Highlights

தமிழகத்தில் குறிப்பாக, ஈரோடு மாவட்டம், நசியனூர், பவானி அருகில் வானத்தை நோக்கி பார்த்த போது இன்று மாலை சரியாக ஆறு மணியளவில்,மேகக்கூட்டங்கள் சூழ சற்று வெயில் குறைவாகவே காணப்பட்டு இருந்தது. 

வானத்தில் தோன்றிய "இந்திய வரைபடம்"..! இந்த அதிசயத்தை பார்த்து மகிழுங்கள்..!  

பொதுவாகவே வானத்தில் தோன்றிய குதிரை, வானில் தோன்றிய அரிய காட்சி, வானத்தில் தோன்றிய ஓர் அதிசயம் என்ற தலைப்பின் கீழ் எத்தனையோ விஷயங்களை நாம் பார்த்து இருப்போம்.

ஆனால் அதெல்லாம் உண்மையா என சிந்தித்து பார்ப்பதிலேயே நம்முடைய கவனம் சற்று சிதறி ஆழ யோசித்து, அதற்கு விடையே கிடைக்கவில்லை என அமைதியாக பார்த்துவிட்டு ஆச்சரியப்படுவோம்.

அந்தவகையில் இன்று தமிழகத்தில் குறிப்பாக, ஈரோடு மாவட்டம், நசியனூர், பவானி அருகில் வானத்தை நோக்கி பார்த்த போது இன்று மாலை சரியாக ஆறு மணியளவில்,மேகக்கூட்டங்கள் சூழ சற்று வெயில் குறைவாகவே காணப்பட்டு இருந்தது. அதாவது சூரியன் மறையும் மாலை நேரமான தற்போது ஒருபக்கம் சூரியன் மறைய... மற்றொரு பக்கம் மேகங்கள் சூழ இருந்த காட்சியை பார்க்கும்போது "இந்தியாவின் வரைபடம் வானத்தில் தோன்றியது" போல காட்சியளித்தது. இதனை பார்த்த பொதுமக்களும் ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் அவரவர் மொபைல் போனை எடுத்து வானத்தில் தோன்றிய "இந்தியா மேப்" என பேசிக்கொண்டே புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதனை பார்க்கும் மற்றவர்களும் ஆஹா.. இது என்ன அதிசயம் ? என  புகழ் பாட  தொடங்கியுள்ளனர். மேலும் இது எப்போது நடந்தது? இப்பவும் அப்படியே உள்ளதா ? என ஆர்வமாக வானை நோக்கி பார்த்தும் வருகின்றனர். 

இந்த அழகிய புகைப்படம் உங்களுக்காக..! 

click me!