"சத்குருவை" புகழ்ந்து தள்ளிய சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி..!

By ezhil mozhiFirst Published Mar 5, 2020, 6:03 PM IST
Highlights

ர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள காவேரி கூக்குரல் இயக்கம் வெப்பமண்டல நாடுகளில் தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், விவசாய நிலங்களை பாலைவனமாவதையும் தடுப்பதற்காக செயல்திட்ட வரைப்படமாக பார்க்கப்படுகிறது.

"சத்குருவை" புகழ்ந்து தள்ளிய சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி..! 

ஆன்மீகம் மட்டுமின்றி சமூக சவால்களை எதிர்கொள்வதிலும் சத்குரு தீவிரமாக செயல்படுகிறார் என சத்குருவை சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி புகழ்ந்து உள்ளார்.

”ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகத்தில் மட்டுமின்றி சமகால சமூகத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதிலும் தீவிரமாக செயலாற்றி வருகிறார்” என்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி திரு. தல்வீர் பண்டாரி புகழாரம் சூட்டியுள்ளார்

கோவை ஈஷா யோகா மையத்துக்கு நேற்று (பிப்.28) வருகை தந்த அவர் சத்குருவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக சத்குரு தொடங்கி வைத்த ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்துக்கு தனது ஆதரவையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சத்குரு அவர்கள் ‘குரு’என்பதற்கு ஒரு புது அர்த்தம் கொடுத்துள்ளார். அவர் ஆன்மீகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதோடு மட்டுமின்றி, சமகாலத்தில் சமூகத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

ஏற்கனவே, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள காவேரி கூக்குரல் இயக்கம் வெப்பமண்டல நாடுகளில் தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், விவசாய நிலங்களை பாலைவனமாவதையும் தடுப்பதற்காக செயல்திட்ட வரைப்படமாக பார்க்கப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கூட்டமைப்பு (UNFCCC) போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளில் சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தாக்கம் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடிள்ளார். 

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி திரு.தல்வீர் பண்டாரியும் இவ்வியக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

click me!