ஆங்கிலம் மட்டும் இல்லை.. உலகின் பல மொழிகளுக்கும் மூல மொழி தமிழ் தான்.. பலருக்கும் தெரியாத தகவல்..

Published : Jul 04, 2023, 02:17 PM IST
ஆங்கிலம் மட்டும் இல்லை.. உலகின் பல மொழிகளுக்கும் மூல மொழி தமிழ் தான்.. பலருக்கும் தெரியாத தகவல்..

சுருக்கம்

உலகில் உள்ள வேர் சொற்களுக்கு தமிழ் மொழி தான் மூலம் என்பதை மொழி ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

“ கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்தக்குடி” என்ற புறப்பொருள் வெண்பா பாடல் மூலம் தமிழின் பெருமையை உணர முடியும். ஆம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் தான். தமிழ் பேசியவர்களே உலகம் முழுவதும் பரவி சென்றனர். ஒரு மொழியில் வேர் சொற்கள் ( Root words) தான் முக்கியமானவை, வேர் சொற்களில் இருந்து தான் மற்ற சொற்கள் உருவாகின்றன. அந்த வகையில் உலகில் உள்ள வேர் சொற்களுக்கு தமிழ் மொழி தான் மூலம் என்பதை மொழி ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அந்த ஆங்கிலம் மட்டுமின்றி உலகின் பிற மொழிகளிலும் தமிழ் சொற்கள் கலந்துள்ளன. உதாரணமாக திருமண நிச்சயத்தை Betrothal என்று இன்று ஆங்கிலத்தில் சொல்கின்றனர். ஆனால் அது “ பெற்றோர் ஒத்தல்” என்ற தூய தமிழ் வார்த்தை என்பது பலருக்கும் தெரியாது. சமஸ்கிருதம் – தமிழ் மொழிகளுக்கான இடையேயான சண்டை பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உண்மையில், ஆரியர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், சிந்து சமவெளி நாகரிகம் கூட, தமிழ் நாகரிகம் தான் என்றும், அந்த நாகரிகத்தை அழித்தவர்களும் ஆரியர்கள் என்ற யூதார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதே போல சமஸ்கிருதத்தின் மூலம் கூட தமிழ் தான். புத்த துறவிகள், வட இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பிராகிருதம் என்ற தமிழில் இருந்து சிதைந்த மொழியை உருவாக்கி சமஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மௌரிய பேரரசின் முடிவு, புஷ்ய மித்ரன் சுங்கன் என்ற பிராமண அரசனால் ஏற்பட்டது. அதற்கு பிறகே புத்தர்களின் சமஸ்கிருதத்தை ஆரியர்கள் களவாடி கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. 

உதாரணமாக அரசன் என்ற வார்த்தை ராசன் ஆகி, வடமொழியில் ராஜா ஆகி இருக்கிறது. அதே போல் அவை என்ற வார்த்தை சபை என்று ஆகி உள்ளது. அரசவை என்பது ராஜ்ய சபா என்று மாறிய பின்னணி இதுதான். எனினும் சமஸ்கிருதம் தமிழை விட பழைய மொழி என்பதே ஆரியர்களின் வாதமாக உள்ளது. ஆனால் தமிழ் 2600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று கீழடியில் ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால் சமஸ்கிருதம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அசோகர் கால கல்வெட்டில் கூட பிராகிருத மொழியே உள்ளது.

W.W. Skeat என்பவர் The Etymological dictionary of the English Language-ல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழில் இருந்து வந்தவை என்று என்று கூறி உள்ளார். உதாரணமாக S சத்தத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் கொண்ட ஆங்கில வார்த்தை வரும்.

உதாரணங்கள்

S + பேசு = Speech

S + பஞ்சு = Sponge

S+ மெது = Smooth

S+ பரவி = Spray

S+ நாகம் = Snake

வேறு சில எடுத்துக்காட்டுகள்

கரை – Cry

களிமண் - Clay

பிளிறு – Blare

பொத்தான் - Button

வணக்கம் – Welcome

சிறுத்தை – Chetah

ஒன்று – One

சட்டென்று – Sudden

எட்டு – Eight

அரிசி – Rice

இது - It

கலாச்சாரம் – Culture

மாங்காய் – Mango

முருங்கை – Moringa

பாதை – Path

வெற்றி – Victory

சர்க்கரை – sugar

தேதி – Date

மாதம் – Month

குளிர் - Cool

ஏடு கற்றோர் – Educator

கயிறு - Coir

காசு - Cash

ஆங்கிலம் மட்டுமல்ல, சீனர்களின் மாண்டரின் மொழி மற்றும் யூதர்களின் ஹிபுரு'வின் தாய்மொழி அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது. " ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது. இன்னும் சொல்லப் போனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் தமிழ் மொழியில் இருந்து பிரிந்தவை தான். 1500 வருடங்களுக்கு முன் தெலுங்கு என்ற ஒரு தனி மொழி இல்லை. தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெலுங்கு மொழி. 'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை.  தமிழ் மொழியின் ஒரு பகுதியே இன்றைய கன்னடம். 700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை. எனவே தமிழ் மொழியின் ஒரு பகுதியே இன்றைய மலையாளம் . அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்