
ஈஷாவில் யாருக்கும் கொரோனா இல்லை! சோதனை செய்து உறுதி .! ஈஷா மையம் அதிரடி விளக்கம்!
ஈஷா யோகா மையத்தில் யோகா மையத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என ஈஷா யோகா மையம் அதிரடி விளக்கம் அளித்து உள்ளது.
கொரோனா வேகமாக வருவதால், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த ஒரு நிலையில், ஈஷா யோகா மையத்தில் நடந்த நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு கோரோனா பரவ வாய்ப்பு உள்ளது என பரவலான விமர்சனம் பரவியது.
இதற்கு முன்னதாக டில்லி மாநாட்டில் தொடர்ந்து, கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார். இதனை தொடர்ந்து தற்போது விளக்கம் அளித்து உள்ளது ஈஷா மையம்.
அதன் படி,
மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை மேற்கொண்டனர். இங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை'என்றும் தேவையில்லாமல் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது
கடந்த பிப்ரவரி 21 சிவராத்திரி அன்று கோவை வெள்ளியங்கிரியில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் பங்கேற்று இருந்ததை தான் தற்போது குறிப்பிட்டு பேசி வருகின்றனர். ஆனால் ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள் 150 பேருக்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.