பீதியை கிளப்பும் புதிய அறிவிப்பு..! அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்குமாம்..!

By ezhil mozhiFirst Published Mar 21, 2019, 4:25 PM IST
Highlights

அடுத்த 3 தினங்களுக்கு, தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது  
 

அடுத்த 3 தினங்களுக்கு, தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது  

அதன் படி, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிலிலும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளதாம். வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட  வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதே போன்று சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நாளையும் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 

click me!