குடும்ப பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கணவன்மார்களுக்கு சூப்பர் டிப்ஸ் இதோ..!

Published : Mar 21, 2019, 03:51 PM IST
குடும்ப பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கணவன்மார்களுக்கு சூப்பர் டிப்ஸ் இதோ..!

சுருக்கம்

யார் வீட்டில் தான் சண்டை இல்லை என பலரும் ஈசியாக பேசுவதை பார்த்து இருப்போம் அல்லவா..? இது போன்ற கணவன் மனைவிக்கு இடையே வரும் சண்டையை எப்படி கண்ட்ரோல் செய்யலாம் தெரியுமா..? 

யார் வீட்டில் தான் சண்டை இல்லை என பலரும் ஈசியாக பேசுவதை  பார்த்து இருப்போம் அல்லவா..? இது போன்ற கணவன் மனைவிக்கு  இடையே வரும் சண்டையை எப்படி கண்ட்ரோல் செய்யலாம்  தெரியுமா..? 

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, மனைவிக்கு என்ன வேண்டும் என முதலில் கால் செய்து கேட்டுக்கோங்க...வரும் போது என்ன வாங்கிட்டு வர வேண்டும் என்று.... அதே போன்று திருமணநாள், அல்லது குடும்ப உறுப்பனர்களின் பிறந்த  நாள் அல்லது மிக முக்கியமான நாட்களில் மனைவிக்கு அழகாக ஒரு கிப்ட் வாங்கி தர மறந்து விடாதீர்கள்....

மனைவி புதிதாக ஆடை அணிந்து இருந்தால் இந்த ஆடை உங்களுக்கு மிக அழகாக உள்ளதே என கூறுங்கள்... எப்போதும் முகத்தை உர்ருன்னு வைக்காமல் மனைவியை பார்க்கும் போதெல்லாம் சின்னதா ஒரு ஸ்மைல் கொடுங்கள்..

இத்தனை நாட்கள் நீதானே எனக்காக சமையல் செய்தாய்..இன்று ஒரு நாள்.. நான் உனக்காக செய்கிறேன் என சொல்லி பாருங்கள்...அவர்கள் அப்படியே அசந்துவிடுவார்கள்....

வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு செல்வதோ அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியில் சென்று ஓட்டலில் உணவு அருந்துவது, பார்க், பீச் என எங்காவது சென்று வாருங்கள்..எப்போதும் வீட்டிலேயே அடைந்துக்கிடப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

கொஞ்சம் நேரமாவது தன் பிள்ளைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.என்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு..என்னுடைய ட்ரெஸ் எப்படி இருக்கு...இது உன்னோட சேரிக்கு மேட்ச் ஆகுதா என கேள்விகேட்டு மனைவியை பாசமாக வைத்துக்கொள்ளுங்கள்....

சிறு குறை என்றாலும் அதனைசொல்லி சொல்லி காண்பித்து அவர்கள் மனதில் ஒரு விதமான கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டாம்...ஆக மொத்தத்தில் சில விஷயங்களை அனுசரித்து சென்றாலே வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். இல்லை என்றால் கோவிந்தா கோவிந்தா தான் ...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

75+ Happy Father's Day Wishes in Tamil: கண்கலங்க வைக்கும் 75+ தந்தையர் தின வாழ்த்துகள்..!
75+ Happy International Yoga Day Wishes in Tamil: WhatsApp முதல் Facebook வரை கலக்கும் 75+ தமிழ் வாழ்த்துகள்