
ஓவர் தைரியத்தில் ஒரே ஓட்டம் பிடித்த "காதல் ஜோடி"..! கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் பம்மி பதுங்கிய பரிதாபம்..!
கோவை த துடியலூரில் காதலித்து திருமணம் செய்த புதுமண ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பை கேட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை துடியலூர் பகுதியில் அமைந்துள்ளது ராக்கிபாளையம் என்ற சிறு கிராமம். இங்கு வசித்து வரும் கிருஷ்ணன் என்பவரின் மகன் பிரஷாந்த் என்பவரும், சிவகிரியில் வசித்து வரும் மயில்சாமி என்பவரின் மகள் கார்த்திகா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்ற வாரம் ஓர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடும் எதிர்ப்பை தெரிவித்த இரு வீட்டாரிடமும் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக உயிருக்கு பயந்து பாதுகாப்பு கோரி துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு சமரசம் செய்த போலீசார் புதுமண ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.