"வெள்ளை கொடியுடன்" இந்திய எல்லையில் பாக் வீரர்கள்..! நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

Published : Sep 14, 2019, 04:47 PM ISTUpdated : Sep 14, 2019, 05:02 PM IST
"வெள்ளை கொடியுடன்" இந்திய எல்லையில் பாக் வீரர்கள்..! நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

சுருக்கம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீரின் ஹாஜிபூர் செக்டர் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் இரு நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. 

"வெள்ளை கொடியுடன்" இந்திய எல்லையில் பாக் வீரர்கள்..! நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..! 

இந்திய எல்லைப் பகுதியில் நம் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 2 பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் இந்திய எல்லைக்குள் வந்து தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீரின் ஹாஜிபூர் செக்டர் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் இரு நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 10ம் தேதி ஹாஜிபூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதில் 10 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.  இதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அதில் பாகிஸ்தானை சேர்ந்த  இரண்டு வீரர்களின் உடல்களை கொண்டு செல்ல பயத்துடன் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி இந்திய எல்லைக்குள் வந்து பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்றனர். 

வெள்ளைக் கொடியுடன் அவர்கள் வந்ததால், அவர்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தாமல் இந்திய எல்லைக்குள் அனுமதித்து, இருவரின் உடல்களை எடுத்து செல்ல அனுமதித்து உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பிறந்த குழந்தையை 'எத்தனை' நாள்கள் கழித்து தொட்டிலில் போடனும்? எந்த வயசுக்கு பின் போடக்கூடாது? முழுவிவரம்
Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?