இந்தியர்களுக்கு ஏன் அதிகமாக இதய நோய் வருகிறது என்பதற்கு புதிய பதில் கிடைத்துள்ளது. இது முந்தைய கருத்துக்களுக்கு நியாயம் கற்பிப்பதாகவே அமைந்துள்ளது.
தமனிகளின் சிறிய துளை அல்லது விட்டம் காரணமாக இந்தியர்கள் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால், இது காரணமல்ல என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர் கங்கா ராம் மருத்துவமனை இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதய நோய்க்கு இந்தியர்களின் சிறிய மேல் உடல் அமைப்புதான் காரணம், தமனியின் சிறிய விட்டம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வுக்கு 250 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த முடிவு இந்தியன் காலேஜ் ஆப் கார்டியாலஜி இதழிலில் வெளியாகியுள்ளது. இதில் வெளியாகி இருக்கும் முடிவுகள் அனைத்தும், மக்களின் பொதுவான கருத்துகளுக்கு நேர்மாறாக அமைந்துள்ளது. தமனியின் சிறிய விட்டம் தான் இதய கோளாறுகளுக்கு அதிக காரணம் என்று கருதப்பட்டு வந்தது.
undefined
மழை காலங்களில்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்!
"ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களில் 51 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 18 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள், 4 சதவீதம் பேர் புகைப்பிடிப்பவர்கள், 28 சதவீதம் பேர் ரத்தத்தில் அதிக கொழுப்பு உடையவர்கள் , மற்றும் 26 சதவீதம் பேர் பரம்பரையாக இதய நோய் வரலாறு கொண்டவர்கள் என்பதை கண்டறிந்து இருப்பதாக இந்த ஆய்வை சமர்ப்பித்து இருக்கும் சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவரும், இதய நோய் பிரிவின் தலைவருமான டாக்டர். ஜேபிஎஸ் சானி தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கான சராசரி தமனி விட்டம் பெண்களை விட கணிசமாக பெரியதாக இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியர்களின் சிறிய மேல் உடற்பரப்பு காரணமாக தமனியின் விட்டமும் சிறியதாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. சிறிய ரத்த தமனி விட்டம் காரணமாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்களுக்கு தமனிகளில் கொழுப்பு படிவு ஆபத்து இருக்கும் என்று கருதப்பட்டு வந்தது. எனவே, இந்தியர்களின் இதயப் பிரச்சனைகளுக்கு சிறிய விட்டம் கொண்ட தமனிகள்தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது இது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.