சென்னை ஆலந்தூரில் புதிய நடை மேம்பாலம்...! அடேங்கப்பா... இனி சட்டுபுட்டுன்னு அந்த பக்கம் போயிடலாம்..!

By ezhil mozhiFirst Published Feb 4, 2020, 6:00 PM IST
Highlights

புதிய மேம்பாலத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்கள் மேமபாலம் மூலம் எளிதாக கடந்து செல்ல முடியும். 

சென்னை ஆலந்தூரில் புதிய நடை மேம்பாலம்...! அடேங்கப்பா... இனி சட்டுபுட்டுன்னு அந்த பக்கம் போயிடலாம்..! 

சென்னையில் 9 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நடைமேம்பாலத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து மிகுந்த ஜிஎஸ்டி சாலையில் இருந்து ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் பொருட்டு புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டது அரசு 

அதன் படி, புதிய மேம்பாலத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்கள் மேமபாலம் மூலம் எளிதாக கடந்து செல்ல முடியும். 

இந்த மேம்பாலமானது, 55 புள்ளி 41 மீட்டர் நீளமும், 6 புள்ளி 41 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நடை மேம்பாலத்தில் இரண்டு மின் தூக்கிகள், 4 எஸ்கலேட்டர்கள், சிசிடிவி கேமராக்கள், எல்.இ.டி மின்விளக்குகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

click me!