நிம்மதியான வாழ்க்கைக்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாத நான்கு ரகசியங்கள் குறித்து நீம் கரோலி பாபா சில வாழ்க்கை தத்துவங்களை நமக்கு கற்றுத் தருகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே வெளிப்படையாக இருப்பது நமக்கு ஆபத்து ஆகிவிடும். சில விஷயங்களை எப்போதும் சொல்லக் கூடாது. மனிதர்களுக்கு ரகசியங்கள் எப்போதும் தேவைப்படுகிறது. நாம் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லும் போது, சிலர் நம் வார்த்தைகளையே நமக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்து முடியும். ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீம் கரோலி பாபா 4 விஷயங்களை எப்போதும் யாரிடமும் பகிரக் கூடாது என்கிறார்.
யார் இந்த நீம் கரோலி பாபா?
நீம் கரோலி பாபா, ஆஞ்சநேயரின் அவதாரமாக பக்தர்களால் கருதப்படுகிறார். இவர் 1900ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அக்பர்பூர் கிராமத்தில் பிறந்தார். திருமணமாகிய பிறகு துறவுக்கு சென்றார். தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுத்து மீண்டும் வீடு திரும்பினார். தன் வாழ்க்கையில் கடைசி 10 ஆண்டுகள், டெல்லி கைஞ்சி தாமில் உள்ள ஆசிரமத்தில் கழித்தார். அவரின் ஆசியை பெற மக்கள் இப்போதும் அங்கு செல்கின்றனர். அவர் மறைந்தாலும் அவரின் போதனைகள் மனித வாழ்க்கைக்கு இன்றளவும் பயன்பட்டு வருகிறது. மனிதனின் வாழ்க்கை சிக்கல்களை குறைக்க பாபா சொன்ன ரகசியங்கள்.. பின்வரும் விஷயங்களை எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
கடந்த காலம்
ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் சில நல்ல அல்லது கெட்ட கடந்த காலம் இருக்கும். உங்கள் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லக்கூடாது. குறிப்பாக கடந்த காலத்தில் ஏதேனும் தவறு நடந்தால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்கிறார் பாபா. ஏனென்றால் நீங்கள் பகிர்வதன் மூலம் உங்களை அவர்கள் மதிப்பீடு செய்து, உங்களை அவமதிக்கலாம் அல்லது உங்களை அந்த பழைய கண்ணோட்டத்தில் பார்த்து உங்களை கேள்வி கேட்கலாம்.
பலம்/ பலவீனம்
நம்முடைய பலம் அல்லது பலவீனம் பற்றி யாரும் யாரிடமும் சொல்லக் கூடாது என்கிறார் பாபா. இதைச் செய்வதன் மூலம் உங்கள் எதிரிகள் எளிதில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்களை வீழ்த்தலாம். தோல்வி உறுதியாகிவிடும்.
தானம்
வலது கையால் கொடுத்ததை இடது கை அறியக்கூடாது என்பார்கள். யாருக்கு, எங்கே, எவ்வளவு நன்கொடை அளித்தீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். தானம் செய்ததை தம்பட்டம் அடிப்பது அதன் தகுதியை முடிவுக்குக் கொண்டுவருகிறது. இதைப் பற்றி பேசுபவர்களின் வாழ்வில் எதிர்மறை ஆற்றலும் சேர்ந்து வருகிறது. புண்ணியம் செய்தும் நன்மையில்லாமல் போய்விடும்.
வருமான விவரம்
உங்களுக்கு எவ்வளவு அன்பானவராக இருந்தாலும், உங்கள் வருமானத்தை குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று பாபா கூறுகிறார். வருமானம் அல்லது வருமானத்தைக் குறிப்பிடுவதன் மூலம், மக்கள் உங்களை அதே மட்டத்தில் இருந்து மதிப்பிடத் தொடங்குவார்கள், மேலும் உங்கள் வைப்புத்தொகையின் மீது மக்களின் தீய பார்வையும் விழும்.