தினமும் சைக்கிள் ஓட்டுங்க, சும்மா ஜம்முன்னு வாழுங்க ! அதெப்படினு கேக்குறீங்களா? அப்போ இதை படிங்க.

By Asianet Tamil  |  First Published Mar 27, 2023, 9:15 PM IST

தினமும் சைக்கிளிங் செய்வதால் பல்வேறு நன்மைகளை உடலுக்கு தருகின்றது. அது என்னென்ன நன்மைகள் என்று இன்றைய பதிவில் காணலாம்.


முன்பபெல்லாம் சைக்கிள் கூட ஒரு விதமான போக்குவரத்துக்கு பயன்படுத்த வாகனமாக இருந்தது. பின் நவீன மோட்டர்களின் வளர்ச்சியால் மெல்ல மெல்ல அதன் பயன்பாடு குறைந்து விட்டது என்று கூறலாம். இன்று வீடுகளில் ஒரு சிலர் மட்டுமே குறிப்பாக குழந்தைகள் மட்டுமே விளையாட்டுக்காக அல்லது பொழுது போக்கிற்காக மட்டுமே சைக்கிளை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சைக்கிள் ஊட்டுவது மிக சிறந்த மற்றும் ஈஸியான உடற்பயிற்சி என்றே சொல்ல வேண்டும். சைக்கிளிங் செய்வதால் உடல் உறுப்புகள் மற்றும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். தவிர இன்றைய அவசர மற்றும் இயந்திர உலகத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதும் கூட. 

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதுபோன்று சைக்கிள் ஓட்டுவதும் முக்கியம் என்று இன்றைய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர்.

தினமும் சைக்கிளிங் செய்வதால் பல்வேறு நன்மைகளை உடலுக்கு தருகின்றது. அது என்னென்ன நன்மைகள் என்று இன்றைய பதிவில் காணலாம்.
 

சைக்கிள் ஓட்டுவதால் கை,கால் மூட்டு, எலும்புகள் மற்றும் தசைகள் போன்றவை வலுப்பெறுகின்றன. தவிர அதிகாலையில் காற்றோட்டமான சூழலில் சைக்கிளிங் செய்து வந்தால் சில்லென்ற சுத்தமான காற்றும் கிடைக்கும் மேலும் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கும்.

Tap to resize

Latest Videos

சைக்கிளிங் செய்வதால் நமது இதயத் துடிப்பு நன்றாக செயல்படுகிறது. தவிர உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து உடலின் எடையை குறைக்க வழிவகுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சைக்ளிங்கை நிச்சியமாக முயற்சிக்கலாம் 

தினமும் சைக்கிளிங் செய்ய செய்ய உடலில் இருக்கும் குளுகோஸ் அளவை குறைத்து நீரழிவு நோயையை கட்டுப்படுத்துகிறது.அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக வும், மகிழ்ச்சியாகவும் காணப்படுவர்கள் என்று உளவியல் ரீதியான உண்மை என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நித்தமும் சைக்கிளிங் செய்வதால் உடலின் ஸ்டேமினா அதிகரித்து காணப்படும். குழந்தைகளுக்கு தினமும் சைக்ளிங் செய்ய பயிற்சி அளிப்பதால் அவர்களின் மூளையின் செயல்திறன் மற்றும் சிந்திக்கும் திறன் அதிகரித்து அவர்களின் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்த முடியும்.

முக்கியமாக இன்றைய எரிபொருளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் மட்டுமே செல்வதால் கூடுமானவரை சிறிய சிறிய தொலைவுகளுக்கு  செல்ல சைக்ளிங் செய்வதை பழக்க படுத்திக்கங்க. 

ஆக இப்பொழுது கோடை விடுமுறை வரவுள்ள நிலையில் குழந்தைகளுக்கு சைக்ளிங் செய்வதால் உண்டாகும் நன்மைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு சைக்ளிங்ன் அவசியத்தை உணர்த்தி அவர்களுக்கு சைக்ளிங் பயிற்சியை கொடுங்கள். மேலும் நீங்களும் தினமும் சைக்ளிங் செய்து உங்க ஆரோக்கியத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். 

click me!