உங்க பிட்டத்தை அழகாவும், பெரிதாகவும் மாற்றும் உணவுகள் பற்றி தெரியுமா?

By Ma Riya  |  First Published Mar 23, 2023, 6:17 PM IST

பிட்டத்தை பெரிதாக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 


உங்களுக்கு நம்ப கடினமாக இருக்கலாம். ஆனால் உங்கள் பிட்டத்தை பெரிதாக்கும் பல்வேறு உணவுகள் உள்ளன. அழகியல் காரணங்களுக்காக, உடற்கட்டு கவர்ச்சியாக தெரிய என வெவ்வேறு காரணங்களுக்காக பிட்டத்தை பெரிதாக்க பெண்கள் விரும்புவார்கள். இதற்கு உடற்பயிற்சியுடன் இணைந்த ஆரோக்கியமான உணவு விரைவில் பலனை கொடுக்கும். பெரிய பிட்டத்தைப் பெற உதவும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

இறால் மீன் 

Tap to resize

Latest Videos

இறால் புரதம் நிறைந்த உணவு. இது கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மீன் உணவை உங்கள் உணவில் சேர்ப்பது கலோரியை கூட்டாமல், தசையை வளர்க்கிறது. தசை வளர்ச்சிக்கு முக்கியமான அமினோ அமிலம் லியூசின் இதில் உள்ளது. 

பாதாம் 

உங்கள் பிட்டத்தை பெரிதாக்கும் சுவையான உணவுகளில் பாதாம் முக்கியமானது. பாதாமில் வைட்டமின் ஈ, கால்சியம், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், இரும்புச்சத்து நிரம்பியுள்ளது. எல்லோருக்கும் வொர்க்அவுட்டிற்குப் பின் அதிக பசி எடுப்பது இயல்பானது. உங்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை நிரப்பி, ஆற்றலை அதிகரிக்க வேண்டும் என்றால் பாதாம் உண்ணலாம். இதில் உள்ள சத்துக்கள் சோர்வைப் போக்கி, உடலை ஆரோக்கியமாக வைக்கும். நீங்கள் இதை வறுத்து சாப்பிடலாம். கொஞ்சம் பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். 

நட்ஸ் வெண்ணெய் 

ஆரோக்கியமான கொழுப்புகள் தசை வலிமை, உடற்கட்டமைப்பு, பெரிய பிட்டம் பெறுவதற்கு அவசியம். இதற்கு முந்திரி வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், பாதாம் வெண்ணெய் உதவலாம். இவை அனைத்தும் இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள், பொட்டாசியம், வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. 

சியா விதைகள்

சியா விதைகள் காண்பதற்கு சிறியதாக இருந்தாலும் பலன்கள் பெரிது. இவை ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. சியா விதைகள் பிட்டத்தை பெரிதாக்கவும் உதவும். 

கீரை

உங்களுக்கு தெரியுமா? 90களின் கிளாசிக் கார்ட்டூன்களான பாப்பாய் (popeye) கீரையை சாப்பிட்டதும் அதிக பலன் பெற்று கெட்டவர்களை அடித்து துவம்சம் செய்வார். அது வெறும் கதையல்ல... இந்த கீரைகள் உண்மையில் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள், தாதுக்களின் ஆற்றல் மையமாகும். இது இரும்பின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது உங்கள் பிட்டத்தை பெரிதாக்கும் ஆரோக்கியமான உணவுகளில் குறிப்பிடத்தக்கது. 

உருளைக்கிழங்கு

கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பிய, உருளைக்கிழங்கில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஒரு அரை கப் உருளைக்கிழங்கில் சுமார் 15.7 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 67.9 கலோரிகள் உள்ளன. அவை பிட்டம் தசைகளை உருவாக்குவதற்கும் உங்கள் குளுட்டுகளின் (glutes) சுற்றளவை அதிகரிப்பதற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். 

பூசணி விதைகள்

பிட்டத்தை பெரிதாக்க பூசணி விதைகளை உங்கள் உணவில் சேர்க்கவும். அவை ஆரோக்கியமானவை, சத்தானவை மற்றும் ருசியானவை. இவை சீரான தசையை வளர்க்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இதிலுள்ள மாங்கனீஸ் உதவும். 

ஆளிவிதை 

இந்த விதையில் நல்ல அளவு மெக்னீசியம், பி வைட்டமின்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்க எளிதான வழியாகும். நீங்கள் அதை தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைக்கலாம். அதை காலையில் குடிக்கலாம் அல்லது உங்கள் சாலடுகளில் தூவி உண்ணலாம். 

பால்

கால்சியம் நிறைந்த பாலை தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு அருந்தலாம். இதில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், தாதுக்கள், வைட்டமின்கள், புரதம் காணப்படுகிறது. ஒரு கிளாஸ் பசும்பால் குடிப்பது, உடற்பயிற்சிக்கு பிறகு தசை புரதத் தொகுப்பை மேம்படுத்தவும், தசை வலியைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். 

இதையும் படிங்க: நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி? இந்த 6 வழிகள் இருக்கு..! 1 தர்பூசணிக்குள் ஓராயிரம் நன்மைகள்!!

கோழியின் நெஞ்சுப்பகுதி 

உங்கள் பிட்டத்தை பெரிதாக்குவதற்கு சிக்கன் இறைச்சியில் மார்பக பகுதி ஏற்றது. இதில் புரதம், பி வைட்டமின்கள், நியாசின், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகம் உள்ளன. 

தக்காளி

தக்காளியில் அதிகளவு தண்ணீர் இருந்தாலும், அவை உங்கள் பிட்டத்தை பெரிதாக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். தக்காளியில் போதுமான அளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தசையை வளர்ப்பதில் பெரிதும் உதவுகின்றன. பிட்டத்தை பெரிதாக்க நல்ல பலனை தரும். 

காளான் 

சைவ உணவு உண்பவர்களுக்கு காளான்கள் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளன. காளான்களில் பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், ஃபோலேட், பி வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன.

பிட்டம் வடிவாகவும், அழகாகவும் மாற இந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

இதையும் படிங்க: தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் மொபைல் பயன்படுத்தினால், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பது உண்மையா?

click me!