
கணினி அச்சு போல கண்களைக் கவரும் நேபாளி பெண்ணின் கையெழுத்து உலகளவில் சிறந்த அழகான எழுத்தாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இன்றைய குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கையெழுத்து என்பது பெரிய தலைவலியாகிவிட்டது. செல்பேசி யுகத்தில் பேனாவைப் பிடித்து எழுதுவதை பலர் மறந்துவிட்டனர். ஆனால் மாணவர்களுக்கு தேர்வில் தற்போதைக்கு பேனா தான் தவிர்க்க முடியாததாக இருப்பதால் கஷ்டப்பட்டு கையால் எழுதும் நிலை உள்ளது. இதற்கும் கூடிய விரைவில் முடிவு காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வீட்டுப்பாடமும் கூட PDF வடிவில் வாட்ஸ்அப்பில் அனுப்பும் பல பள்ளிகள் இருப்பதால், வீட்டுப்பாடமும் கையில் எழுதாத நிலையில் நம் குழந்தைகள் உள்ளனர். இதன் மத்தியில் அழகான கையெழுத்து என்ற கருத்தே மறைந்துவிட்டது. கையால் எழுத வந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. கையால் எழுதினால் கைக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கிறது, இது நினைவாற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுவது உண்டு. ஆனால், அதை யாரும் இன்று லட்சியம் செய்வதில்லை.
ஆனால் இதோ ஒரு 17 வயது சிறுமி தனது கையெழுத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளார். புகழ் பெற்றது மட்டுமல்லாமல், உலகின் மிக அழகான கையெழுத்தாளர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரது பெயர் பிரகிருதி மல்லா. நேபாளத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண் தனது கையெழுத்தால் புகழ் பெற்றுள்ளார். இவரது செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உலகின் மிக அழகான கையெழுத்து எழுத்தாளர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
இஸ்ரேலுடன் போரை தொடங்குவோம்.. ஜோர்டான் திடீர் அறிவிப்பு..! | டிரம்ப் + நெதன்யாகுவிற்கு வார்னிங்!
பிரகிருதி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே, அதாவது, 8 ஆம் வகுப்பில் படிக்கும் போதே அவரது கையெழுத்து புகழ் பெற்றது. அவர் எழுதிய ஒரு கட்டுரை புகழ் பெற்றது. அப்போதே அவருக்கு பல திசைகளிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இப்போது அவரை மிஞ்சுபவர்கள் யாருமில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது ஸ்பிரிட் ஆஃப் யூனியன் சிறப்பு நிகழ்வுக்கு பிரகிருதி தனது கையெழுத்தில் எழுதிய வாழ்த்துச் செய்தியை ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு அளித்தார். அந்த புகைப்படங்கள் இப்போது மீண்டும் வைரலாகி வருகின்றன. பிரகிருதிக்கு நேபாள ராணுவத்திடமிருந்து பாராட்டும் கிடைத்துள்ளது.
தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தால்தான் கையெழுத்தும் அழகாக வரும். ஒரே நாளில் வந்துவிடாது. நல்ல பேனா அல்லது பென்சில் வேண்டும். மெதுவாக எழுத வேண்டும். ஒவ்வொரு வார்த்தை மீதும் கவனம் வைத்து எழுத வேண்டும். கோடு போட்ட தாளை முதலில் எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சீராக எழுத்துக்களை எழுத முடியும். சிறிய வார்த்தைகளை முதலில் எழுதி, பின்னர் பெரிய பாராக்களை எழுத வேண்டும். துவக்கத்தில் அழகாக எழுத கற்றுக் கொண்டு, பின்னர் எழுத்து வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் எங்கு உங்களது எழுத்தை சரி செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்யவும்.
குரங்கு செய்த காரியத்தால் இருளில் மூழ்கிய இலங்கை!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.