300 years old mummy: பசிபிக் கடலில் மீனவர்களிடம் சிக்கிய 300 வருட பழமையான மம்மி! கடற்கன்னி வடிவிலான தோற்றம்.!

Anija Kannan   | Asianet News
Published : Mar 06, 2022, 02:15 PM ISTUpdated : Mar 06, 2022, 02:19 PM IST
300 years old mummy: பசிபிக் கடலில் மீனவர்களிடம் சிக்கிய 300 வருட பழமையான மம்மி!  கடற்கன்னி வடிவிலான தோற்றம்.!

சுருக்கம்

300 years old mummy: ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே மீனவர்கள் மீன்பிடிக்கும் போது, 300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி ஒன்று கிடைத்திருக்கிறது. 

சில வேதிப் பொருள்களை கொண்டும் கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது மம்மிக்கள் என்று அழைக்கப்படுகிறது.எகிப்தில் தற்பொழுது இறப்பவர்களின் உடலை பிரமிடில் வைக்கவில்லை என்றாலும், உடலைப் பதப்படுத்தி புதைக்கும் வழக்கத்தை  இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். 

அவ்வாறு காலத்தால் அழியாக மனித மம்மிகளை பற்றி உலகமெங்கும் ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.

அந்த வகையில் தற்போது, ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே மீனவர்கள் மீன்பிடிக்கும் போது, 300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி ஒன்று கிடைத்திருக்கிறது. இதனை பற்றிய தகவல்களை பெற, தொல் பொருள் விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே தோற்றம் கொண்டு இருக்கும். இந்த மம்மி வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது.இந்த மம்மிக்கு, அதன் மேற்பகுதி கூர்மையான பற்கள், சற்று விகாரமான முகம், இரண்டு கைகள், தலையில் முடி புருவமுடன் கண்கள் போன்றவை மனிதர்களுக்கு இருக்கும் பகுதி போல உள்ளது.இருப்பினும், அதன்  கீழ்ப்பகுதியில் மீன்களைப் போல செதில்கள் மற்றும் வால் போன்ற குறுகலான முனை உள்ளது. 

மேலும், இது 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என சி.டி. ஸ்கேனிங் உள்ளிட்ட பரிசோதனைகளின் முடிவில், விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஜப்பானின் பிரபல செய்தித்தாள் அளித்திருக்கும் தகவலின்படி, “கைப்பற்றப்பட்டுள்ள மம்மி `பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் வலையில் கிடைத்தது’ என்ற குறிப்பிட்டுள்ளது. அந்த மம்மியை கைப்பற்றிய மீனவர்கள், அதை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து, பாதுக்கப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க...Hair straightening: பியூட்டி பார்லர் போகாமல், காசு செலவு பண்ணாமல்...வீட்டில் ஸ்ட்ரெயிட்னிங் செய்வது எப்படி,..?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்