
சிலர், பகலில் சிறிது நேரம் தூங்கினால் புத்துணர்ச்சி உணர்வு ஏற்படுகிறது என்கின்றனர். ஒரு சிலர், பகல் நேர தூக்கம் உடலை சோம்பேறி ஆக்குது என்கின்றனர். இவற்றில் எது சரி, என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால், சிலரின் அதிகப்படியான தூக்கம் உடலுக்கு ஆரோக்கிய பாதிப்பை உண்டு பண்ணுகின்றது. எப்படி என்பதை கீழே பார்ப்போம்.
பகல்நேர தூக்கம் உங்களுக்கு சோர்வு மற்றும் சோம்பலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், அதன் பாதிப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பகல் தூக்கத்தின் விளைவு:
பகல்நேர தூக்கம் இரவின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், இரவில் நல்ல தூக்கம் இருக்காது.
பகல்நேர தூக்கம் உங்களை மந்தமாக்குகின்றன.பல ஆராய்ச்சிகளில் இது மந்த நிலை ஏற்பட்டு பாதிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில், பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல, அவ்வாறு செய்வது கபம் மற்றும் பித்த தோஷங்களுக்கு இடையில் சமநிலை இல்லாத நிலைக்கு வழிவகுக்கும் என்கின்றது.
அப்படியானால் பகல் நேர தூக்கம் யாருக்கு அவசியம்?
வேலை பார்த்து களைப்பில் உள்ளவர்கள், மதியம் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்குவது, ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளின் முடிவில் வெளிவந்துள்ளது. ஆனால், மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக்க கூடும்.
ஆயுர்வேதத்தின் படி, ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில் சிறிது நேரம் தூங்கலாம் என்கின்றனர்.
அப்படியாக, பகலில் தூங்கும் போது அலாரத்தை வைத்து கொண்டு தூங்கலாம், சிறிது நேரம் தூங்கலாம். இவை உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும். இருப்பினும், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்துவது சிறந்தது. இல்லையெனில், எடை இழப்பு, நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும்.எனவே, மேற்சொன்ன வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.