இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்...இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கான இருந்துடாதீங்க

Published : Feb 18, 2025, 07:06 PM IST
இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்...இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கான இருந்துடாதீங்க

சுருக்கம்

மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பதற்காக இயர்போன்களில் பாட்டு கேட்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் இந்த இயர்போன்களை தொடர்ந்து அதிக நேரம் நாம் பயன்படுத்தும் போது எந்தெந்த விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். இயர்போன்களால் ஏற்படும் பாதிப்புக்களை வாங்க தெரிந்து கொள்ளலாம். 

சென்னை :  இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே இயர்போன் அல்லது ஹெட்ஃபோன்களை பயன்படுத்துகிறார்கள். சுற்றி இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் பாட்டு கேட்பதற்கு, படம் பாடர்ப்பதற்கு, பயணம் செய்து கொண்டே மற்றவர்களுடன் போன் பேசுவதற்கு என பல விஷயங்களுக்கும் இயர்போன் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயர்போன்களை எப்போதாவது பயன்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அதிகமானவர்கள் எப்போது காதுகளில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி அதிகமாக இயர்போன் பயன்படுத்துவதால் கடுமையான காது கேளாமை பிரச்சனை ஏற்பட்டு விடும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். இயர்போனில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்பது,  ஒலி மாசுபாடு, தொடர்ந்து ஒலி அதிர்வுகளை கேட்டுக் கொண்டே இருப்பதால் விரைவில் கேட்கும் திறனை இழப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள். காதுகளில் தொற்று, தலைவலி ஆகியவை ஏற்பட்டு விடும் என சொல்லப்படுகிறது. 

கேட்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறிகள் :

* காதுகளில் எப்போதும் ஏதாவது ஒரு சத்தம், இரைச்சல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

* சத்தம் அதிகமாக உள்ள இடங்கள் அல்லது மோசமான ஒலியியல் உள்ள இடங்களில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளுவதில் சிரமம் ஏற்படும். 

* சில சத்தங்கள் உங்களின் காதுகளை அடைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

இயர்போனால் ஏற்படும் பாதிப்புகள் :

* நம்முடைய காதுகளில் ஒலியை உள்வாங்கும் மடல்கள் மிகவும் மெல்லியவை, இதில் தொடர்ந்து இயர்போனில் அதிகமான சத்தத்தின் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதால் காதில் உள்ள உணர்திறன் செல்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

* காது குழலை அடையும் ஒலியை மிக அதிகமான பெருகச் செய்து, அதிகமான ஒலியை தொடர்ந்து கேட்க வைக்கிறது. இதனால் விரைவிலேயே கேட்கும் திறனை இழக்கும் நிலை ஏற்படும்.

* சத்தத்தை நீக்கும் இயர்போன்கள் சுற்றுப்புற சத்தத்தை குறைத்து சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதாக இருந்தாலும் அவற்றை அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானதாகும். இவைகள் ஒலி அளவை அதிகரிக்கின்றன. இதனால் சுற்றி உள்ள சாதாரண ஒலியை கூட கேட்க முடியாத அளவிற்கு மிக மோசமாக கேட்கும் திறனை பாதிக்கலாம்.

* இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் காது குழாய்களில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்கள் தொற்றை அதிகரிக்க செய்யும். இத காது தொற்றுகளை அதிகரிக்க செய்யும். இயர்போன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது இன்னும் அதிகமான தொற்றுக்களை ஏற்படும், காதுகளில் மிக கடுமையான வலியை ஏற்படுத்துவதுடன் தற்காலிகமாக கேட்கும் திறனையும் பாதித்து விடும்.

* பொதுவாக காதுகளில் உருவாகும் மெழுகு, காது குழாய்களை சுத்தம் செய்கின்றன. ஆனால் இயர்போன்களை தொடர்ந்து பயன்படுத்தினால் காது குழாய்களுக்குள் மெழுகு செல்ல வாய்ப்பு ஏற்படும். இதி ஒலியை அடைப்பதுடன் சளி தொல்லையை அதிகரிக்க செய்யும். 

* சில சமயங்களில் அதிக ஒலியில் இயர்போன்களை பயன்படுத்தும் போது காதுகளில் டின்னிடஸ் அல்லது ஒலிக்கும் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. இது நிரந்தமாக காது கேட்காமல் போவதற்கு வலி வகுக்கும். பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு இயர்போன்கள் பயனுள்ளதாக இருந்தாலும் அவற்றை அதிகமாக பயன்படுத்தும் போது காதுகளின் கேட்கும் திறனை மிக அதிகமாக பாதித்து விடும். 

* அதிக சத்தத்துடன் ஹெட்போன் பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, மூளை பாதிப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகள் இயர்போன் பயன்படுத்தும் போது அவர்களுக்கு நரம்பியல் பாதிப்புகள் 3 முதல் 5 சதவீதம் அதிகமாக ஏற்பட வாய்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மூளை, காதுகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்புடன் செயல்படுவது பாதிக்கப்படும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்