காளான் வாங்குனா இப்படி சாதம் செய்து சாப்பிடுங்க.. சுவை அருமையாக இருக்கும்!

Published : Oct 04, 2024, 02:57 PM IST
காளான் வாங்குனா இப்படி சாதம் செய்து சாப்பிடுங்க.. சுவை அருமையாக இருக்கும்!

சுருக்கம்

Mushroom Rice Recipe : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காளானில் சுவையான சாதம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இன்று மதியம் என்ன சாப்பாடு செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சீக்கிரமாக மற்றும் சுவையாக ஏதாவது ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியானால் அதை வைத்து சூப்பரான சாதம் செய்து சாப்பிடுங்கள். காளானில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மதிய உணவாக இந்த ரெசிபியை அடைத்துக் கொடுக்கலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த ரெசிபி செய்து கொடுங்கள். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் காளான் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: காளான் வாங்குனா இப்படி ஒருமுறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க..!

காளான் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
காளான் - 10
பெரிய வெங்காயம் - 1
ஸ்பிரிங் ஆனியன் - 2 
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 7
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  காளான் வாங்குனா ஒன் டைம் இப்படி புலாவ் செஞ்சு சாப்பிடுங்க.. சுவையா இருக்கும்!

செய்முறை :

காளான் சாதம் செய்ய முதலில், எடுத்து வைத்த பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு காளான் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளானை சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சுமார் 2 நிமிடம் வதக்கவும். இப்போது இதில் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். இதனுடன் ஸ்ப்ரிங் ஆனியனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காளான் சாதம் தயார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Special Tea : குளிர்க்காலத்துல இப்படி 'டீ' போட்டா சுவையோட 'நோய் எதிர்ப்பு சக்தியும்' அதிகரிக்கும்..
Holiday Depression : விடுமுறையா இருந்தாலும் மன அழுத்தமா? இதை மட்டும் செய்ங்க; நிச்சய பலன் உண்டு